பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/334

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

control block

333

control clerk


பொருளைப் பொறுத்தவரை கட்டுப்பாட்டு மின் இணைப்புப் பாட்டை (control bus) எனும் மின்வழி மூலமாக கணினியின் செயல்பாடுகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. மென்பொருளைப் பொறுத்தவரை தரவுகளைக் கையாளும் நிரல் ஆணைகளைக் குறிக்கின்றன. 2. ஒரு வரைகலைப் பயனாளர் இடை முகத்தில் (GUI) ஒரு குறிப்பிட்ட செயல்பாட்டை நிறைவேற்றப் பயனர் இயக்குகின்ற, திரையில் தோன்றும் ஒரு சிறு உருப் பொருள். மிகப் பரவலாகப் பயன்படும் இயக்கு விசைகள், கட்டளைப் பொத்தான்கள், தேர்வுப் பெட்டிகள், உருள் பட்டைகள் போன்றவையாகும்.

control block : கட்டுப்பாட்டுப் பகுதி : ஒரு செயலாக்க அமைப்பைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான குறிப்பிட்ட வகையான தகவல். அதன் பிறபகுதிகளுக்கு அனுப்பப்படுகின்ற சேமிப்பகத்தின் பகுதி.

control break : கட்டுப்பாட்டு நிறுத்தம் : கட்டுப்பாட்டுப் புலத்தில் உள்ள மதிப்புகளின் மாற்றத்தின் விளைவாக ஒரு நிரல் செயலாக்கத்தில் சில சிறப்பு நிகழ்வுகள் ஏற்படும் இடம்.

control bus : கட்டுப்பாட்டு மின்பாட்டை : ஒரு கணினியில், மையச் செயலகத்தில் கட்டுப் பாட்டகத்திலிருந்து நினைவகத்தை இணைக்கும் பாதை.

control cards : கட்டுப்பாட்டு அட்டைகள் : உருவாக்கி போன்ற செயலாக்க அமைப்பு, ஒரு பொது வழக்கச் செயலைக் குறிப்பாகப் பயன்படுத்தும் போது, தேவைப்படும் உள் வீட்டுத் தரவுகளைக் கொண்டுள்ள துளையிட்ட அட்டை. எடுத்துக்காட்டு : ஒரு குறிப்பிட்ட நிரலை ஏற்றி இயக்குமாறு ஆணையிடும் தொடர் அட்டைகளில் ஒன்று.

control change of : கட்டுப்பாட்டு மாற்றம்.

control character : கட்டுப்பாட்டு எழுத்து : ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் கட்டுப்பாட்டு இலக்கத்தை நிறுத்துதல் அல்லது மாற்றம் செய்தலை ஆரம்பித்து வைக்கும் எழுத்து.

control circuits : கட்டுப்பாட்டு மின்சுற்றுகள் : கணினியின் ஆணைகளை விளக்கி தேவையான இயக்கங்களை செய்யவைக்கும் மின்சுற்றுகள்.

control clerk : கட்டுப்பாட்டு எழுத்தர் : தரவு செயலாக்க