பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/335

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

control code

334

control elements



இயக்கங்களை கட்டுப்படுத்துவது தொடர்பான பணிகளைச் செய்யப் பொறுப்பேற்றுள்ளவர்.

control code : கட்டுப் பாடு குறிமுறை : அச்சிடலில், தரவு பரிமாற்றத்தில், திரைக்காட்சி களில் ஒரு சாதனத்தின் நட வடிக்கையைக் கட்டுப்படுத்து வதற்காக ஒரு கணினி நிரலில் பயன்படுத்தப்படும் அச்சிட வியலாக் குறிகள். (எ-டு) புதிய வரி, ஒரு வரி நகர்த்தல், தாளை வெளித் தள்ளல், நகர்த்தியை திரும்பச் செய்தல் போன்ற பணிகளுக்கான அச்சுப் பொறிக் கட்டுப்பாட்டு குறிகள்). ஒரு பயன்பாட்டு மென் பொருள், அச்சுப் பொறியைக் கட்டுப்படுத்தும் வழி முறை களைக் கொண்டிராதபோது ஒரு நிரலரால் அல்லது ஒரு பயனாளரால் கட்டுப்பாட்டுக் குறிகள் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன. ஒளித்தோற்றத் திரைக்காட்சியில் கட்டுப் பாட்டுக்குறிகள், உரைப் பகுதியை அல்லது காட்டியைக் கையாள்வதற்கென மையச் செயவியால் திரையகத்துக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. மிகப் பரவலாகப் பயன்படுத்தப் படும் ஒளிக்காட்சிக் கட்டுப் பாட்டு குறிகள் அன்சி (ANSI) மற்றும் விடீ-100 (VT-100) ஆகும்.


control collection : இயக்கு விசைகள் தொகுப்பு.

control computer கட்டுப் பாட்டுக் கணினி.

control console : கட்டுப்பாடு பணியகம் முனையத்தை இயக்குபவர் அல்லது சேவை பொறியாளருக்கும் கணி னிக்கும் இடையில் தொடர்பு கொள்ளப் பயன்படும் கணினி அமைப்பின் பகுதி.


control counter : கட்டுப்பாட்டு எண்ணி.

control data : கட்டுப்பாட்டு தரவு வேறொரு தரவு மதிப்பையோ அல்லது துணைச் செயல்பாட்டையோ அல்லது ஒரு கோப்பு நடவடிக்கையையோ அடையாளம் கான தேர்ந்தெடுக்க, செயல்படுத்த அல்லது மாற்றியமைக்கப் பயன் படுத்தப்படும் ஒன்று அல்லது மேற்பட்ட கட்டுப்பாட்டு தரவு வகைகள்.

கோப்பு நடவடிக்கை

control data corporation : கன்ட்ரோல் டேட்டா கார்ப்பரேஷன் : மீத்திறன் (சூப்பர்) கணினிகள் உள்ளிட்ட கணினிக் கருவிகளைப் பெருமளவு உற்பத்தி செய்யும் நிறுவனம்.

control elements : கட்டுப் பாட்டு உறுப்புகள்.