பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/339

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

control system

338

conversational interaction



control system : கட்டுப் பாட்டு முறைமை.

control tape : கட்டுப் பாட்டு நாடா.

control technology : கட்டுப் பாட்டு தொழில்நுட்பம் வெளிப்புறச் சாதனங்களைக் கட்டுப்படுத்துவதற்காக கணினிகளையும் நுண் மின்னணுக் கருவிகளையும் பயன்படுத்துவது. தானியங்கி அமைப்புகளில் இதை அதிகம் காணலாம்.

control, total : முழுக் கட்டு பாட்டு.

control unit : கட்டுப்பாட்டகம். கணினியின் முழு அமைப்பும் செயல்படுவதைக் கட்டுப்படுத்தும் செயலக சாதனத்தின் பகுதி. கட்டுப்பாட்டு பிரிவு என்றும் அழைக்கப்படும்.

control unit, central : மையக் கட்டுப்பாட்டகம்.

control variable : கட்டுப்பாட்டு மாறி திரும்பத் திரும்பச் செயல்படுத்தப்படும் ஒரு செயல் முறையின் போது பின் தொடர்ந்து செல்லும் ஒரு மாறி. ஒவ்வொரு முறை செயல்படும் போதும் அதன் மதிப்பு கூடுகிறது. அல்லது குறைகிறது. ஒரு நிலை எண் அல்லது பிற மாறி களுடன் ஒப்பிடப்பட்டு செயல்முறையின் இறுதி அறியப் படுகிறது.

control words : கட்டுப்பாட்டுச் சொற்கள் நிரலின் சிறப்புப் பொருள் உள்ள ஒதுக்கப்பட்டசொற்கள்.

convention : மரபு ஒரு குறிப்பிட்ட நிரல் அல்லது அமைப்புகளுக்காக ஏற்படுத்தப்பட்ட திறமான, ஏற்கப்பட்ட நடை முறைகள் மற்றும் சுருக்கங்கள், குறியீடுகள் மற்றும் அவற்றின் பொருள்கள். பல்வேறு நிரல்களை ஒன்றினைக்கும் நடைமுறை விதிகள்.

convergence : சங்கமம் : ஏற்கெனவே தனித்தனியாக இருக்கும் தொழில் நுட்பங்களை ஒன்று சேர்த்தல். ஒரு சிஆர்டி படப்புள்ளியில் சிகப்பு, பச்சை மற்றும் நீல மின்னணு ஒளிக்கதிர்கள் ஒன்று சேர்தல்.

conversational : உரையாடல் முறை பயனாளருடன் உரையாடல் நடத்த அனுமதிக்கும் நிரல் தொடர் அல்லது அமைப்பு. அவர் கொடுக்கும் உள்ளிட்டை வாங்கிக் கொண்டு அவரது போக்கில் செயல்பட அது இசைந்து கொடுக்கிறது.

Conversational interaction : உரையாடல் பரிமாற்றம் :