பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/340

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

conversational language

339

conversion table


பயனாளருக்கும் எந்திரத்துக்கும் இடையில் உரையாடல் முறையில் நடைபெறும் பரிமாற்றம்.

conversational language : உரையாடல் முறை மொழி : கணினிக்கும் அதனைப் பயன்படுத்துபவருக்கும் இடையில் தகவல் தொடர்பு ஏற்பட வசதியாக ஏறக்குறைய ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்தும் நிரல் தொடர் மொழி. பேசிக் ஒரு உரையாடல் மொழி.

conventional memory : அடிப்படை நினைவகம் : மரபு நினைவகம் பீ. சி. யின் நினைவகத்தில் முதல் மெகா பைட்டில் முதல் 610-கேயை மட்டும் இது குறிப்பிடலாம். மீதி மேல்நிலை நினைவகப் பகுதியென்று அழைக்கப்படும்.

conversational mode : உரையாடல் பாங்கு : கணினிக்கும் அதனைப் பயன்படுத்துபவருக்கும் இடையில் உரையாடல் நடைபெற உதவும் இயக்கமுறை. இதில் அதற்குக் கிடைக்கும் உள்ளிட்டினைப் பெற்று அதற்கேற்ப கேள்விகள் அல்லது குறிப்புகளை கணினி திருப்பி அளிக்கும்.

conversational operation : உரையாடல் முறை செயல்பாடு : ஒரு நேரத்தில் ஒரு எழுத்து என்ற முறையில் தரவு பயணம் செய்யும் கணினியில் ஒளிக்காட்சித்திரை முகப்புக்கும், கணினிக்கும் இடையில் தரவு அனுப்பப்படுதல்.

conventional programming : மரபு நிரலாக்கம் : ஒரு நடைமுறை மொழியைப் பயன்படுத்தி நிரல் உருவாக்குவது.

conversational remote job entry : உரையாடல் முறை தொலை வேலை நுழைத்தல்.

conversion : மாற்றல் : மொழிமாற்றம் : 1. ஒரு கணினி மொழியிலிருந்து ஒன்றுக்கு அல்லது துளையிட்ட அட்டைகளிலிருந்து காந்தத்தட்டுக்கு என்பது போன்று ஒரு வகையிலிருந்து வேறு ஒரு வகைக்கு மாற்றும் செயல்முறை. 2. ஒருவகையான செயலாக்க முறையிலிருந்து வேறொன்றுக்கு அல்லது ஒரு கருவியிலிருந்து வேறொன்றுக்கு மாற்றுதல். 3. ஒரு வகையான எண்முறையிலிருந்து வேறொன்றுக்கு மாற்றல்.

conversion, data : தரவு மாற்றம்.

conversion table : மாற்றல் பட்டியல் : இருவகையான எண்முறைகளில் உள்ள எண்களை ஒப்பிடும் பட்டியல்.