பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/353

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

cricket presents

352

cricket error handler



பதிப்பில் அதனை உருவாக்கி யவர் மேலும் மேலும் புதிய சிறப்புக் கூறுகளை சேர்த்துக் கொண்டே செல்லும் முறை. அத்தொகுப்பு மிகப் பெரிதாகி, பயன்படுத்த முடியாத அளவுக்குப் பெரிதாகி விடாமல் இந்த முன் னேற்றங்களைச் செய்வர். சந்தை யில் இதே போன்ற பிற மென் பொருள் தயாரிப்புகளுடன் போட்டியிடப் புதிய பதிப் பி வெளியிடும்போது, மேலும் புதிய சிறப்புக் கூறு களைச் சேர்த்து அதன் செய் திறனை மேம்படுத்த முயலும் போது இவ்வாறு நிகழ்கிறது.

cricket presents : கிரிக்கெட் வழங்கும் . கம்ப்யூட்டர் அசோசியேட்ஸ் நிறுவனத்தின் மெக்கின் டோஷ-க்கான டி. டி. பி மென் பொருள். திரைப்பட பதிவுகள், துண்டறிக்கைகள், ஒட்டுமொத்த செலவு போன்ற வெளியீடுகள் உருவாக்குவதற்கான திறனை இது அளிக்கிறது.

cricket stylist கிரிக்கெட் ஸ்டைலிஸ்ட் : ஆப்பிள் மெக் கின்டோஷ் கணினிக்கான புகழ் பெற்ற பொருள்நோக்கு படம் வரையும் மென்பொருள். கோடுகள் செவ்வகம் மற்றும் நீள் வட்ட கருவிகளைப் பயன்படுத்தி கிரிக்கெட் ஸ்டைலிஸ்ட் மூலம் ஒவியங்களை உருவாக்கும்.

cripped version : சுருக்க பதிப்பு : ஒரு வன்பொருள் அல்லது மென்பொருள் தயாரிப்பின் முன்னோட்டப் பதிப்பு. சுருங்கி வடிவில் இருக்கும். குறைந்த வசதிகளைக் கொண்டதாக இருக்கும்.

crippleware : தடுக்கும் பொருள் : சில கட்டுப்பாடுகளுடன் உரு வாக்கப்படும் செயல்விளக்க மென்பொருள். சான்றாக, 50 பதி வேடுகளை மட்டும் நுழைக்க அனுமதிக்கும் தரவுத் தளத் தொகுப்பைக் குறிப்பிடலாம்.

criteria range : வரன்முறை எல்லை பதிவேடுகளைத் தேர்வு செய்வதற்கான நிபந்தனைகள்.

critical error : உயிர்நாடி பிழை நெருக்கடிப் பிழை , கணினியின் செயலாக்கத்தையே இடை நிறுத்தம் செய்துவிடும் பிழை. ஒரு மென்பொருள் மூல மாகவோ, பயனாளரின் தலை பீட்டினாலோதான் அப் பிழை யைச் சரிசெய்ய முடியும். (எ-டு) இல்லாத ஒரு வட்டிலிருந்து படிக்க முயல்தல், அச்சுப்பொறி யில் தாள் தீர்ந்துபோகும் நிலை, தரவுச் செய்தி அனுப்புகையில் சரிபார்ப்புத் தொகை (checksum) யில் ஏற்படும் பிழை. இன்ன பிற.

critical-error handler : ஆபத்தான பிழை கையாளி டாஸ் குறுக்