பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/354

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

critical path

353

CROM



கீட்டு ஆணைகளில் ஒன்று. சாதனத்தில் முக்கிய பிழை ஏற்பட்டால் இதைப் பயன்படுத் துவர். பிழையிலிருந்து மீண்டெழும் நிரல்கூறை இதற்குப் பதிலாக பயன்படுத்தலாம்.

critical path : முக்கிய பாதை : ஒரு பெரிய திட்டத்தை ஒழுங்கு படுத்தப்பட்ட தொடர்பகுதி பிரிக்கும் முறை. முந்தைய இயக்கத்தை ஒட்டியே ஒவ்வொரு நிலையும் அமையும். கால அளவுகளைப் பற்றிய மதிப்பீடுகளைச் செய்ய முடியும். மட்டுமே தொடர்புள்ளது என்று சொல்ல முடியாவிட்டாலும் முக்கிய பாதை ஆய்வுமுறை ஏராளமான கணக்கீடுகளைக் கொண்டது. கணினி மூலமே இதை எளிதில் செய்ய முடியும்.

critical path method (CPM) முக்கியப் பாதை முறை (சிபிஎம்) திட்டம் நிறை வேற்றப்படுவதற்குத் தேவையான ஒவ்வொரு முக்கிய நிரல் களையும ஆராயந்து செய்வதை உள்ளடக்கிய பேரளவு நீண்டகாலத் திட்டங்களைக் கட்டுப்படுத்தும் மேலாண்மை தொழில் நுட்பம்.

critical region : முக்கிய மண்டலம் : ஒரே நேரத்தில் (பல் செயலாக்க முறையில்) ஒன்றுக்கு மேற்பட்ட செயல் முறையில் இயக்க முடியாத ஆணைகளின் தொகுப்பு.

critical success factors : முக்கிய வெற்றிக் காரணிகள் அவர் களது முயற்சியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக நிர்வாகிகள் கருதும் சிறிய எண்ணிக்கையிலான முக்கிய காரணிகள். இவற்றில் வெற்றி பெற்றால் அவர்களது இலக்குகளை அடைவதுடன் நிறுவனத்தின் வெற் றிக்கும் உறுதியளிக்கலாம்.


CRJE சிஆர்ஜேஇ உரையாடல் முறை சேய்மைப் பணி பதிவு என்று பொருள்படும் Conversational Remote Job Entry என்பதன் குறும்பெயர். உரையாடல் முறை மொழியைப் பயன்படுத்தி தொலை தூரத்தில் முனையத்தில் பணி யாற்றும் ஒருவர் தன்னுடைய பதிவுகளை இடம் ஒன்றுக்கு அனுப்ப, தொலை தூர மைய நிலையத்தில் அதைச் செயலாக்கம் செய்தல்.

CROM : க்ரோம் : Control ROM என்பதன் குறும்பெயர். பெரும்பாலான மையச் செயலகச் சிப்புகளுடன் ஒருங்கிணைந்த பகுதி. மையச் செயலக சிறு ஆணைகளை ஒரு வரிசையாகச்