பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/355

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

crop

354

cross footing check



சேர்ந்த கூட்டு மெருகு ஆணைகளாக மாற்றி சேமிக்கும் இடம். கணினியைப் பயன்படுத்துவோருக்கு கூட்டியின் மூலம் கிடைக்கும் பெருக்கு அல்லது பிரி போன்றவை பெரு ஆணைகளில் அடங்கும்.

crop : க்ராப் : கணினி வரை கலையில் ஒரு படத்தின் சில பகுதிகளை வெட்டுதல்.

crop marks, : க்ராப் அடையாளங்கள் : வடிவத்தை விரும்⅝பும் அளவில் வெட்டுவதற்குப் பயன்படுகின்ற, காகிதத்தில் உள்ள அச்சிடப்பட்ட கோடுகள்.

cropping : வெட்டுதல்.

cross assembler : குறுக்கு சில்லுமொழி மாற்றி : ஒரு கணினிக்காக நிரல்களை மொழி பெயர்ப்பதற்கு இன்னொரு கணினியில் இயங்கும் சில்லு மொழி மாற்றி.

cross check : குறுக்கு சரி பார்ப்பு : இரண்டு மாறுபட்ட முறைகளின் மூலம் கணிப் பினை சோதனை செய்தல்.

cross compiler குறுக்கு மொழிமாற்றி குறிப்பிட்டு தொகுப்பதற்காக வடிவமைக்கப்பட்டது அல்லாத வேறு ஒரு கணினியில் செயல்படும் மொழிமாற்றி.

cross compiling/assembling : குறுக்கு மொழிமாற்றல்/சில்லு மொழிமாற்றல் : சிறு கணினி, பெருமுகக் கணினி அல்லது நேரப் பங்கீட்டு சேவையைப் பயன்படுத்தி நுண் கணினிகளில் பின்னர் பயன்படுத்துவதற்காக நிரல்களை எழுதி பிழைதிருத்தல்.

cross development : குறுக்கு உருவாக்கம்; மாற்று உருவாக்கம் : ஒரு குறிப்பிட்ட முறைமையைப் பயன்படுத்தி முற்றிலும் வேறுவகையான ஒரு முறைமைக்கான நிரல்களை உருவாக்குதல். இலக்கு முறைமையைக் காட்டிலும் உருவாக்கு முறைமையின் உருவாக்கக் கருவிகள் உயர்தரமானதாக இருப்பின் இது இயலும்.

cross foot : குறுக்குக் கால்; குறுக்குச் சரிபார்ப்பு ஒரு கூட்டுத் தொகையின் துல்லியத் தன்மையை சரிபார்க்கும் முறை. ஒரு கணக்குப் பதிவேட்டில் ஒரு கூட்டுத் தொகையைச் சரிபார்க்க அக்கூட்டலில் இடம் பெறும் நெடுவரிசை மற்றும் கிடை வரிசைகளின் கூட்டுத் தொகையைச் சரி பார்ப்பதைப் போன்றது.

cross footing check : குறுக்கும் நெடுக்கும் சரிபார்ப்பு : குறுக்காக சேர்த்து அல்லது கழித்து