பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/356

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

cross functional

355

cross - hatching



சுழி (பூஜ்யம்) யாக்கி முடிவு களைக காணும முறை.

cross functional information systems : குறுக்குச் செயல் பாட்டு தரவு அமைப்புகள் வணிகச் செயலாற்றமும் தரவு அமைப்புகளும் ஒருங்கிணைந்த தரவு அமைப்புகள். இதன் மூலம் ஒரு நிறுவனத்தின், பிற செயல் உறவுகளின் தரவுகளை பங்ககிட்டுக் கொள்ள முடியும்.

cross hairs : குறுக்கு முடிகள் : ஒரு உள்ளிட்டுச் சாதனத்தில் ஒன்று செங்குத்தாகவும், ஒன்று கிடைமட்டமாகவும் உள்ள இரண்டு கோடுகள். இவற்றின் குறுக்கு வெட்டு அடையாளமானது வரை கபடமறை அமைப்பில் காட்டியின் இடத்தைக் குறிப்பிடுகிறது.

cross hatch . குறுக்கு கோடு : ஒரு ஒவியத்தின் பகுதிகளைச் குறுக்கு பிரித்து, ஒவ்வொரு பகுதியையும் வேறுபடுத்திக் காட்டுதல்.

cross hatching : குறுக்குப் பின்னலிடல் ஒரு வருகைப் படத்தின் பரப்பை நிரப்புவதற்க்குஹ பயன்படுத்தப்படும் பல வழிமுறைகளில் இதுவும் ஒன்று. ஒன்றுக்கொன்று வெட்டிக் கொள்ளும் நிலை யான இடை கோடுகளினால் ஆன நிழலிடு முறை.

cross - linked files ; குறுக்குத் தடுப்புக் கோப்பு : மாற்றித் தொடுக்கப்பட்ட கோப்புகள் :

எம்எஸ் டாஸ், விண்டோஸ் 3. x, விண்டோஸ் 95 ஆகியவற்றில் ஏற்படும் கோப்புச் சேமிப்புப் பிழை. ஒரு நிலை வட்டு அல்லது நெகிழ்வட்டிலுள்ள ஒன்று அல்லது மேற்பட்ட வட்டுப் பிரிவு அல்லது கொத்துப் பகுதி, கோப்பு ஒதுக்கீட்டு அட்டவணையில் ஒன்றுக்கு மேற்பட்ட கோப்புகளுக்கு ஏற்படுவது.

காணாமல் போன