பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/357

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

cross - platform

356

crowbar


கொத்துகளைப்போலவே மாற்றித் தொடுக்கப்பட்ட கோப்பு களினாலும் ஒரு பயன்பாட்டுத் தொகுப்பு இயங்கிக் கொண்டிருக்கும்போதே நட்ட நடுவில் நின்று போகும்.

cross - platform : பல் பணித்தளத்தது; குறுக்குப் பணித்தளத்தது; மாற்றுப் பணித்தளத்தது : ஒன்றுக்கு மேற்பட்ட பணித் தளங்களில் இயங்கக் கூடிய ஒரு மென்பொருள் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கணினி அமைப்பில் இணைத்து இயக்கக்கூடிய ஒரு வன்பொருள் சாதனம்.

cross - post : குறுக்கு அஞ்சல்; மாற்று அஞ்சல் : ஒரு செய்திக் குழுவில் உள்ள ஒரு கட்டுரையை அல்லது செய்தியை, ஒரு மின்னஞ்சல் அமைப்பில் உள்ள ஒரு மடலை இன்னொரு மின்னஞ்சல்/செய்திக் குழுவில் நகலெடுப்பது. எடுத்துக்காட்டாக, யூஸ்நெட் செய்திக் குழுவிலிருந்து ஒரு காம்பு செர்வ் குழுவுக்குச் செய்தியை மாற்றுவது. அல்லது ஒரு மின்னஞ்சலை வேறொரு செய்திக் குழுவுக்கு அனுப்பி வைப்பது.

cross - reference : மாற்றுக்குறிப்பு.

cross reference dictionary : குறுக்குக் குறிப்பு அகராதி : ஒரு குறிப்பிட்ட அடையாளம் உள்ள சில்லுமொழி நிரலின் எல்லா குறிப்புகளையும் அடையாளம் காண்கின்ற அச்சிட்ட பட்டியல். பல அமைப்புகளில், ஒரு மூல நிரலைச் சேர்த்து விட்ட பிறகு இந்த பட்டியல் தரப்படுகிறது.

cross tabulate : குறுக்குப் பட்டியலிடு : தரவுகளை ஆய்ந்து தொகுத்தல், சான்றாக, ஒரு தரவு தள கோப்பில் உள்ள தரவு களைத் தொகுத்து, விரிதாள் அட்டவணையில் சேர்ப்பது.

cross talk : குறுக்குப் பேச்சு : ஒரு மின்சுற்றிலிருந்து அருகிலுள்ள வேறொரு மின்சுற்று மீது ஏற்படும் தேவையற்ற மின் தாக்கம். அனுப்பும் மின்சுற்றை தொல்லை தரும் மின்சுற்று என்றும், பெற்ற மின்சுற்றை தொல்லைப்படும் மின் சுற்று என்றும் சொல்வர். குறுக்கீடாக ஒரு மின்சுற்றிலிருந்து வேறொரு மின்சுற்றுக்கு சமிக்கை சென்று சேர்தல்,

cross word puzzles : குறுக்கெழுத்துப் புதிர்கள் : கம்மோடோர் -64 வீட்டுக் கணினியில் பயன்படுத்துவதற்கான மென்பொருள்.

crowbar : கடப்பாரை : அதிக மின்னழுத்தம் தாக்குவதன்

அபாயத்திலிருந்து ஒரு கணினி