பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/358

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

CRT

357

cryptoanalysis


அமைப்பைப் பாதுகாக்கும் மின்சுற்று.

CRT சிஆர்டீ  : எதிர்மின் கதிர்க் குழாய் என்று பொருள்படும் Cathode Ray Tube என்பதன் குறும்பெயர்.

CRT controller : சிஆர்டீ கட்டுப்படுத்தி : ஒர் ஒளிக்காட்சி தகவிப் பலகையின் ஒரு பகுதியாக இருப்பது. இதுதான் ஒளிக் காட்சி சமிக்கைகளை இயற்றுகிறது. கிடைமட்ட, செங்குத்து ஒத்திசைவுச் சமிக்கைகளையும் சேர்த்தே உருவாக்குகிறது.

CRT plot . சிஆர்டீ வரைவு : எதிர் மின் கதிர்க் குழாயின் திரையில் காட்டப்படும் கணினி உருவாக்கிய ஒவியம் அல்லது வரைபடம்.

CRT terminal : சிஆர்டீ முனையம் : 1. காட்சித்திரை சாதனம். கணினியுடன் தகவல் தொடர்பு கொள்ள ஒரு இயக்குநரால் பயன்படுத்தப்படும் விசைப் பலகையுடன்கூடிய காட்சி சாதனம். ஒரு செய்தி அல்லது சொற்றொடரின் பகுதியை இயக்குபவர் விசைப்பலகையில் தட்டச்சு செய்ததும் திரையில் எழுத்துகள் காட்டப்படும்.

crunch : நொறுக்கு  : கணினி நபர்களால் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் அல்லாத சொல். வழக்கமான கணினிச் செயல்பாடுகளைச் செய்து எண்களைச் செயலாக்கம் செய்யும் கணினியின் திறனை இது குறிப்பிடுகிறது. கணினிகள் ஏராளமான எண்களை செயலாக்கம் செய்து அல்லது நொறுக்கித் தள்ளிவிடும் திறனுடையது.

crunching : நொறுக்குதல் .

cryoelectronic storage : மீக்குளிர் மின்னணு சேமிப்பகம் : மிகக் குறைவான வெப்பநிலையில் மீக் கடத்திகளாக விளங்கும் பொருள்களைக் கொண்ட சேமிப்பகம்.

cryogenics : மீக்குளிர் நுட்பவியல் : பூஜ்யத்துக்கு அருகில் உள்ள வெப்பநிலையில் செயல் படும் பொருள்களைப் பயன்படுத்தி செய்யப்படும் சாதனங்களைப் பற்றிய ஆய்வும் பயன் பாடும். cryosar : மீக்குளிர் நிலைமாற்றி : மிகக் குறைந்த வெப்பநிலையில் இயங்கும் இரண்டு அரைக்கடத்தி முனையச் சாதனங்கள்.

cryotran : மீக்குளிரி : கணினி மின்சுற்றுகளில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் மீக் கடத்தும் திறனை அடிப்படையாகக் கொண்ட மின்சாரம் கட்டுப்படுத்தும் சாதனம்.

cryptoanalysis : மறையீட்டுப் பகுப்பாய்வு; இரகசிய எழுத்