பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/361

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Ctrl-Alt-Delete

360

CTS


பலகையில் ஒரு சிறப்பு விசை.

Ctrl-Alt-Delete : கன்ட்ரோல்-ஆல்ட்- டெலீட் :  ஐபிஎம் மற்றும் ஒத்தியல்புக் கணினிகளில் மீட்டியக்கப் (reboot) பயன்படும் மூவிசைச் சேர்க்கை. Ctrl Alt, Del என்று குறிக்கப்பட்டுள்ள மூன்று விசைகளையும் ஒருசேர அழுத்தினால் எம்எஸ் டாஸில் இயங்கும் கணினியில் இடைத் தொடக்கம் (warm boot) நடை பெறும். இம்முறையில் கணினி, அகப் பரிசோதனைகள் அனைத்தையும் மேற்கொள்வதில்லை. மின்சாரத்தை நிறுத்தித் தரும் முதல்தொடக்க (cold boot) முறையில் அனைத்துச் சரி பார்ப்புகளும் நிகழும். விண்டோஸ் 95/98/என்டி/2000 இயக்க முறைமைகளில் Ctrl+Alt+ Del விசைகளை அழுத்தும் போது ஒர் உரையாடல் பெட்டி தோன்றும். நடப்பிலுள்ள ஒரு பணியை மட்டும் முடித்து வைக்கலாம். அல்லது கணினியையே நிறுத்தவும் செய்யலாம்.

Ctrl-C : கன்ட்ரோல்-சி :  1. யூனிக்ஸ் இயக்க முறைமையில் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு செயல்பாட்டை நடுவிலேயே முறிக்க இந்த இரு விசைகளையும் அழுத்த வேண்டும். 2. விண்டோஸ் இயக்க முறைமை யில் இயங்கும் பல்வேறு பயன்பாடுகளிலும், தற்போது தேர்வு செய்துள்ள உருப்படியை (உரை, படம் எதுவும்) இடைநிலை நினைவகத்தில் நகலெடுத்துக் கொள்வதற்கான கட்டளை.

Ctrl-S : கன்ட்ரோல்-எஸ் :  1. மையக் கணினியுடன் முனையக் கணினி மென்பொருள் மூலம் கைகுலுக்கிக் கொள்கிறது. முனையக் கணினித் திரையில் தொடர் தரவு திரையிடப் படும்போது இந்த இரு விசை களையும் சேர்த்து அழுத்தும் போது அப்படியே நின்றுவிடு கிறது. மீண்டும் தொடர கன்ட்ரோல்-கியூ விசைகளை அழுத்த வேண்டும். 2. ஒர் ஆவணம் அல்லது கோப்பினைச் சேமிப் பதற்குப் பெரும்பாலான மென் பொருள் தொகுப்புகளில் பயன் படுத்தப்படும் விசைச் சேர்க்கை.

CTS : சிடீஎஸ் : அனுப்பப் பாதை தயார் என்று பொருள்படும் Clear To Send என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். தொடர்நிலை (analog) தகவல் தொடர்பில் இணக்கிகள் கணினிக்கு அனுப்பும் சமிக்கை. கணினி, தகவலை அனுப்பத் தொடங்கலாம் என்பது பொருள். ஆர்எஸ் 232 சி இணைப்புகளில் 5-வது தடத்தில் அனுப்பி வைக்கப் படும் வன்பொருள் சமிக்கை.