பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/366

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

cut/copy/paste

365

cyberbunk


இடையிலுள்ள பிற செயல் பாடுகளைச் செய்யவும் இத்தகைய அமைப்புகள் அனுமதிக்கின்றன.

cut/copy/paste : வெட்டு/நகலெடு/ஒட்டு.

cut form : நறுக்குப் படிவம் : வெட்டு வடிவம் : ஒசிஆர் (OCR) சாதனங்களில் பயன்படுத்துகின்ற பயன்பாட்டு விலைப் பட்டியல் போன்ற தரவு நுழைவுப் படிவம்.

CUT mode : கட் பாங்கு : கட்டுப்பாட்டக முனையப் பாங்கு எனப் பொருள் படும் Control Unit Terminal Mode என்பதன் குறும் பெயர். முனையத்தை ஒரு முறை பெருமுகக் கணினியுடன் சேர அனுமதிக்கும் முறை. நுண் கணினி இந்த முறையைப் பின் பற்றி பெருமுகக் கணினியுடன் தொடர்பு கொள்வது.

Cutout : வெட்டியெடு : வண்ணத் தூரிகை மென் பொருளில் கத்தரி மற்றும் எடுக்கும் கருவியைப் படுத்தி தேர்ந்தெடுக்கும் பரப்பு.

பயன்

cut-sheet feader : நறுக்குத்தாள் செலுத்தி.

cutter path : வெட்டுப் பாதை : கணினி உதவிடும் உற்பத்தி அமைப்பில் கட்டுப்படுத்தப்படுகின்ற வெட்டுக் கருவியின் இயக்கத்தை விவரிக்கும் வரி.

. cv : சிவி : ஒர் இணைய தள முகவரி கேப் வெர்தே நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

cy : சிஒய் : ஒர் இணைய தள முகவரி சைப்ரஸ் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

cyan : சியான் ; மயில் நீலம் : வண்ண வரைபட முறைகளில் விடிடீ (VDT) களின் மீது அடிக்கடி பயன்படுத்தப்படும் நீல வண்ணம்.

cyber : சைபர் : கன்ட்ரோல் டேட்டா கார்ப்பரேஷன் உற்பத்தி செய்த பெருமுக மற்றும் மீத்திறன் கணினிகளின் வரிசை.

cyberbunk : சைபர் பங்க் : எதிர்கால குற்றவாளிகளைப் பற்றியது. கணினி வங்கிகளை உடைத்துச் செல்லும் ஏமாற்றுக் காரர்கள். அதிக தொழில்நுட்ப அறிவுக் கூர்மையைச் சார்ந்தே அவர்கள் வாழ்கிறார்கள். நியூ ரோமான்சர் மற்றும் ஷாக்வேல் ரைடர் போன்ற அறிவியல் புதினங்களில் இருந்து தோன்றிய சொற்கள்.