பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/369

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

368


cyclic code

cylinder method

சாதாரண இரும எண் முறையிலிருந்து மாறுபட்டது.

பதின்மம் சுழற்சி இருமம் சாதா இருமம்

O 0000 0000

1 0001 0001

2 0011 0010

3 O010 0011

4 0110 0100

5 0111 0101

6 0101 0110

7 0100 0111

8 1100 1000

9 1101 1001

cyclic code : சுழற்சிக் குறியீடு : சாம்பல் குறிமுறை (gray code) போன்றது.

Cyclic Redundancy Check (CRC) : சுழற்சி மிகைச் சரிபார்ப்பு : வட்டுச் சாதனங்களில் பிழை சோதிக்கும் முறை. தரவுகளைச் சேமிக்கும்போது சி. ஆர்சி மதிப்பு மீண்டும் கணிக்கப்படுகிறது. இரண்டு மதிப்புகளும் சமமாக இருந்தால், அந்த தரவு பிழையற்றது என்று கருதப் படுகிறது.

cyclic shift : சுழல் நகர்வு : ஒரு முனையில் விலக்கப்படும் எண் மறுமுனையில் சுழற்சி போன்று சேர்ந்து கொள்ளும் மாற்றம். ஒரு பதிவகத்தில் 23456789 என்னும் எட்டு இலக்கங்கள் இருக்குமானால் இரண்டு பத்தி களில் இடதுபுறமாக சுழற்சி நுகர்வு செய்தால் மாற்றப்பட்ட உள்ளடக்கம் 45678923 என்று இருக்கும்.

Cycolor : சைகாலர் : மீட் இமேஜிங்கின் அச்சிடும் செயல் முறை. ஒளிப் படங்களைப் போல முழு டோனல் உருவங்களை இவை அச்சிடும்.

cylinder : உருளை : ஒவ்வொரு வட்டின் பரப்பிலும் ஒரே இடத்தில் தங்குகின்ற அனைத்துத் தடங்களின் மொத்தம். வட்டு தட்டுகளில், ஒவ்வொரு மேற்பரப்பிலும் அதே தடத்தில் உள்ள தடங்களின் மொத்தம்

cylinder addressing : உருளை முகவரியிடல் : ஒவ்வொன்றுக்கும் ஒரு உருளை எண், மேற்பரப்பு எண் மற்றும் பதிவேடு கூட்டல் எண் ஆகியவற்றைக் கொடுத்து வட்டு பதிவேடுகளைத் தேடும் முறை.

cylinder method : உருளை முறை : படி/எழுது முனைகளை இயக்குவதன் மூலம் நடப்பில் பயன்படுத்தப்படுகின்ற தடத்திற்கு மேலும் கீழும் உள்ள தரவுகளைப் பெறலாம் என்ற கோட்பாடு அல்லது