பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/371

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

D

370

daisy chain interrupt




D

D : பதினாறிலக்க எண்மான முறையில் 14 ஆவது இலக்கம்.

DA : நேரடித் தொடர்பு. நேரணுகல் : Direct Access குறும்பெயர்.

D/A (Digital to Analog) : இலக்க முறையிலிருந்து தொடர் முறைக்கு.

DAA : டிஏஏ : தரவு அணுகு வரிசை முறை என்று பொருள்படும் "Data Access Arrangement" என்பதன் குறும்பெயர்.

DAC : டிஏசி : இலக்கத்திலிருந்து ஒத்த சொல்லுக்கு உருமாற்றி என்று பொருள்படும். "Digital-to-Analog (D/A) Converter" என்பதன் குறும் பெயர்.

DA converter : இலக்க ஒத்திசை மொழிமாற்றி; இலக்கத்திலிருந்து ஒத்த சொல்லுக்கு உருமாற்றி.

DAD : டிஏடி : 'தரவு தள நட வடிக்கை வரைபடம்' என்று பொருள்படும் Database Action Diagram என்பதன் குறும் பெயர். ஒரு தரவு தளத்தில் ஆதாரத்தில் தரவு மீது நடைபெறும் செயலாக்கத்தைக் குறிக்கும் ஆவண மாக்கம்.

daemon : தேமான் : சைத்தானின் ஏவலாட்களில் ஒருவன். நேரப்பகிர்வை ஆதரிக்கும் UNIX என்ற செயற்பாட்டுப் பொறியமைவையும் குறிக்கும். இது, பொறியமைவில் நிகழ்வுகள் நிகழ்வதற்கும், அதற்குப் பதிலாகக் காத்துக் கொண்டிருக் கும் ஏவலாள் போன்ற ஒரு செயல்முமுறையாகும். HTTP, NCSA httpd, CERN httpd, Ipd , ftpd ஆகியவை இதில் அடங்கும். "Daemon" என்பதை , "Demon" என்றும் உச்சரிப்பர். ஆனால் தொழில்நுட்ப வல்லுநர்கள் "Daemon" என்ற உச்சரிப்பையே விரும்புகின்றனர்.

daily cycle : நாட் சுழர்ச்சி.

daisy chain : டெய்சி சங்கிலி : தளமட்டச் சங்கிலி : ஒயர்கள் தொகுப்பு ஒன்றின் வழியாக சமிக்கைகளை அனுப்பும் குறிப்பிட்ட முறை. ஒயர்கள் தொகுப்பில் கருவிகள் எந்த இடத்தில் அமைந்திருக்கிறதோ அதைப் பொறுத்து கருவிகளுக்கான முன்னுரிமைகளை அம்முறை அனுமதிப்பதாக உள்ளது.

daisy chain interrupt : டெய்சி சங்கிலி இடைத் தடுப்பு : தள மட்டச் சங்கிலி இடைத்தடுப்பு :