பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/381

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

data communications

380

data conferencing


data communications package : தரவுச் செய்தித் தொடர்புத் தொகுதி செய்தித் தொடர்புக் கம்பிகளின் வழியாகத் தரவுகளை அனுப்புவதற்கும், பெறுவதற்கும் பயன்படுத்துவோரை அனுமதிக்கும் மென்பொருள்.

data communications system : தரவுத் தொடர்பு அமைப்பு : கணினிகள், இணையங்கள் மற்றும் தரவுத் தொடர்பு இணைப்பு அமைப்புகளைக் கொண்டமுறை.

data compatibility தரவு ஒத்தியல்பு : ஒருவர் மற்றொரு வரின் தரவு வட்டுகளிலிருந்து படிக்கவும் எழுதவும், ஒருவர் மற்றவரின் தரவுக் கோப்புகளைப் பயன்படுத்தவும் இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட கணினிகளின் திறம்பாடு, அவை, ஒரே செயல்முறைகளை இயக்க முடியா விட்டாலும் இவ்வாறு செய்யலாம்.

data compression : தரவு இறுக்கம் : வெற்றுக் களங்களைத் தவிர்த்து, தேவையற்ற இடை வெளிகளையும் தேவையற்ற தரவுகளையும் தவிர்த்து ஆவணங்களின் அளவையும் நீளத்தையும் குறைத்தல்.

data concentration : தரவுகளை திண்மைப்படுத்தல் : 1. பல குறைவான நடுத்தர வேகங்கொண்ட வழிகளிலிருந்து ஒரு இடைப்பட்ட மையத்தில் தரவுகளைச் சேகரித்தல். 2. ஒரு தரவின் இறுதியில் மற்றொரு தரவைச் சேர்த்து ஒரு நீண்ட தரவு வகையை உருவாக்குதல்.

data conferencing : தரவுக் கலந்துரையாடல் : தரவுக் கருத்தரங்கு வெவ்வேறு இடங்களில் உள்ளவர்கள் தங்களுக்கிடையே ஒரு கலந்துரையாடலில் கருத்துப்

தரவுக் கலந்துரையாடல்