பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/382

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

data consistency

381

data declaration


பரிமாற்றம் செய்து கொள்ளல். ஒரிடத்தில் சேமித்து வைக்கப் பட்டுள்ள கோப்புகளை பல்வேறு இடங்களில் பணிபுரிபவர்கள் அணுகவும் திருத்தவும் வழி செய்யும் மென்பொருள் தொகுப்புகளை உள்ளடக்கியது.

data consistency : தரவு ஒத்திசைவு.

data contamination : தரவு மாசுபடுதல் : தரவுகளைத் தன்னை அல்லது தீய நோக்குடன் வேண்டுமென்றே சீரழித்தல்.

data control : கட்டுப்பாட்டுத் தரவு : ஆதார ஆவணங் களிலிருந்து, எந்திரம் படிக்கக் கூடிய தரவுகளைத் தயாரிப்பதன் மூலம், பல்வேறு பணிகளை நிறைவேற்றுவதைக் கட்டுப் படுத்தும் செய்முறை.

data control department : தரவு கட்டுப்பாட்டுத் துறை : ஒரு கணிப்பொறியின் தொகுதிச் செய்முறைப்படுத்தும் செயற் பாடுகளில் உள்ளிடுவதற்காகத் தரவுகளைச் சேகரிப்பதற்கும், முடிவுற்ற அறிக்கைகளை வழங்குவதற்கும் பொறுப்பான செயற்பணி.

data control section : தரவுக் கட்டுப்பாட்டுப் பிரிவு : வகைப்படுத்துதல், உள்ளிடு தரவு ளைச் சேகரித்தல் கணினியைப் பயன்படுத்துவோருக்கு வெளியீடுகளை வழங்குதல் ஆகியவற்றில் தரக் கட்டுப்பாட்டை ஏற்பதற்குப் பொறுப்பான நிறுவனம் அல்லது குழு.

data conversion : தரவு மாற்றம் : தரவு வடிவ மாற்றம் : தரவு வடிவம் ஒன்றினை மற்றொரு வடிவத்துக்கு மாற்றுதல் அதாவது துளையிடப்பட்ட அட்டை ஒன்றிலிருந்து மின்காந்த வட்டு அல்லது நாடா ஒன்றுக்கு மாற்றுதல்.

data cycle : தரவுச் சுழற்சி : தரவு களை உள்ளிடுதல், செய்யல்முறைப்படுத்துதல், வெளிப்படுத்துதல் ஆகியவற்றின் வரிசை முறை.

data declaration : தரவு அறிவிப்பு : விவர அறிவிப்பு : ஒரு நிரலில் பயன்படுத்தவிருக்கும் பல்வேறு விவரக் குறியீடுகளை நிரலின் தொடக்கத்திலேயே அறிவிக்கப் பயன்படும் ஒரு கூற்று (statement). எடுட்டுக்காட்டாக, பணியாளர்களின் விவரங்களைக் கையாள பெயர், வயது, சம்பளம் போன்ற தரவு மாறிலிகளை (variables) அறிவிக்க வேண்டும். இவ்வாறு அறிவிக்கும் முறை மொழிக்கு மொழி