பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/389

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

data glove

388

data leakage


கணினிகளைப் பெருமளவில் தயாரிக்கும் நிறுவனம்.

data glove : தரவு கையுறை : ஒரு கணினியில் பயனாளர் ஒருவரின் கைகள், விரல்களின் நிலையைத் தெரிவிப்பதற்கு விபிஎல் ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்துள்ள ஒரு கையுறை.

datagram : தரவு செய்தி : இணைய (internet) ஆதாரம். சேரி முகவரிகள், செய்திக் குறிப்புகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கிற அனுப்பீட்டுக் கட்டுப்பாட்டு நெறிமுறை/ இணைய நெறிமுறை (TCP/IP) செய்தி அலகு.

data hierarchy : தரவு படிநிலை : தரவுகளை ஒழுங்கான வரிசை முறையில் தொகுதிகளாகவும், உட் தொகுதிகளாகவும் கட்டமைப்புச் செய்தல்.

data import : தரவு இறக்குமதி : மற்றொரு ஆணைத்தொகுப்பில் உருவாக்கப்பட்ட தரவுகளைப் பயன்படுத்தும் (படிக்கும்) திறன். ஒருங்கிணைந்த மென் பொருள் பயன்பாட்டில் இது முக்கியமானது. ஏனெனில் அதில் ஒரு நிரல் தொகுப்பில் சேகரிக்கப்பட்ட அல்லது தயாரிக்கப்பட்ட தரவுகளைப் பல னிரல் தொகுப்புகள் பயன்படுதுகின்றன. தரவு ஏற்றுமதிக்கு எதிரானது.

data independence : தரவு சார்பின்மை : தரவு சுயேட்சை : பயன்பாட்டில் பெரும் மாறுபாடு இல்லாமல் மாற்றக்கூடிய, மற்றும் நடைமுறையைக் கொண்ட தரவு முறைமை ஒன்றின் நிலை.

data input & verification : தரவு உள்ளீடு மற்றும் சரிபார்த்தல்.

data integrity . தரவு ஒருங்கிணைவு தரவு : ஒழுங்கமைவு : கண்டுபிடிக்கப்படாத தவறுகளின் விகிதத்தை அடிப்பையாகக் கொண்ட பணி அலகு.

data interchange format : தரவு பரிமாற்ற வடிவம் : மென்பொருள் உருவாக்குவோர் மத்தியிலான தர நிலை. அது ஒரு நிரல் தொகுப்பின் தரவுகளை மற்றொரு நிர்ல தொப்பு பெற அனுமதிக்கிறது.

data item : தரவு வகை : உருப்படி : ஒரு மதிப்பீட்டை குறிக்கப் பயன்படுத்தப்படும் தரவு வகை . பெயரிடப்பட்ட தரவின் மிகச் சிறிய அலகு.

data leakage : தரவுக் கசிவு : கணினி ஒன்றிலிருந்து திருட்டுத்தனமாக தரவுகளை அகற்றுதல்.