பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/394

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

data planning

393

data processing centre


இலச்சினை. பெல் முறைமையில் உருவாக்கப்பட்டு வழங்கப்பட்ட தரவு தொகுப்புகளைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படுகிறது. இவை தொலைபேசி இணைப்பு மூலம் தரவுகளை அனுப்பவும் பெறவும் பயன் படுத்தப்படுகிறது.

data planning : தரவு திட்டமிடல் : தரவு ஆதார மேலாண்மையில் கவனம் செலுத்தும் ஒரு கூட்டுத் திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வுப் பணி. நிறுவனத்தின் தரவு ஆதாரத்திற்காக ஒர் ஒட்டு மொத்தத் தரவு கொள்கையினை வகுப்பதையும், தரவு கட்டமைப்பை உருவாக்குவதையும் இது உள்ளடக்கும்.

data plotter : வரைவு பொறி.

data point : தரவு முனை : புள்ளி வரைபட அட்டவணையிடும் நோக்கத்துக்காகப் பயன்படுத்தப்படும் எண் மதிப்பீடு. ஒரு எளிமையான நோட்டு வரை படத்தில் நேரத்தை எக்ஸ் அச்சில் குறிப்பிடலாம். துரத்தை ஒய் அச்சில் குறிப்பிடலாம். இரண்டும் வெட்டிக் கொள்ளும் இடம் தரவு மையம் ஆகும்.

data preparation : தரவு தயாரிப்பு : தரவுகளை வடிவமைப்பில் திரட்டி, கணினி ஒன்றில் உள்ளிடுவதற்கு உரிய வடிவத்தில் சேமித்தல்.

data preparation device : தரவு தயாரிப்பு கருவி : கணினி ஒன்றினால் வாசிக்கக்கூடியதாக ஊடகம் ஒன்றில் அல்லது வடிவத்தில் தரவுகளைச் சேகரித்து மாற்றும் கருவி.

data privacy : : தரவு ரகசியம் : தரவு கமுக்கம்; தரவுத் தனி மறைவு.

datapro : டேட்டா புரோ : கணினி ஒன்றின் வன்பொருள் மற்றும் மென்பொருள் சாதனங்கள் தொடர்பான ஆழ்ந்த விவரங் வழங்குகிற ஆய்வு மற்றும் வெளியிட்டு நிறுவனம்.

data processing : தரவு செயலாக்கம் : 1. ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை நிறைவு செய்ய தரவில் செய்யப்படும் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பணிகள் 2. மையம் ஒன்றின் அனைத்துப் பணிகள். 3. தரவுத் தயாரிப்புக் கருவியின் பணிகள். 1. பயனாளருக்குப் பயனுள்ள தரவுகளை வழங்க தரவுகளில் செய்யப்படும் பணிகள்.

data processing, automatic : தானியங்கு தரவு செயலாக்கம்.

data processing centre : தரவு தயாரிப்பு மையம் : தரவுகளைப்