பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/396

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

data propagator

395

data reduction


data propagator : தரவு பரப்பி : DB2 மற்றும் IMS/ESA DB தரவு தளங்களிடையே ஒரு நிலைப் பாட்டினை ஏற்படுத்துகிற IBM மொழி. MS தரவு தளத்தில் தரவு மாற்றப்படுகிறபோது, அது தானாகவே DB2 தரவுத் தளத்திற்கு மாற்றப்படுகிறது.

data protection தரவுப் பாதுகாப்பு : தரவுகளின் அழிவு, மாற்றம் அல்லது வெளிப் படலுக்கு வகை செய்யக்கூடிய, விரும்பியோ, விரும்பாமலோ இடம்பெறும் செயல் களிலிருந்து தரவுகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள்.

Data Protection Act : தரவு பதுகாப்புச் சட்டம் : இது நாடாளுமன்றத்தால் இயற்றப்படும் ஒரு சட்டம். மக்கள் பற்றிய கணினி சார்ந்த சொந்தத் தரவுகளை வைத்திருக்கும் அமைவனங்கள், வணிக நிறுவனங்கள், நிலையங்கள் அனைத்தும் அந்த உண்மையைப் பதிவு செய்து கொள்ளவேண்டும். தங்களைப் பற்றிய கோப்புகளைப் பார்வையிடுவதற்குத் தனிமனிதர்களுக்கு உரிமையுண்டு. காவல் மற்றும் மருத்துவத்துறை பதிவேடுகளுக்கு இதிலிருந்து விலக்கு உண்டு. தவறான தரவுகளைக் கொண்ட ஒரு பதிவேட்டினை மாற்றும்படி ஆணையிடப்படலாம்

data protection register : தரவுக்காப்புப் பதிவேடு.

data purification : தர்வுத் தூய்மையாக்கம் : தரவுகளின் செல்லும் தன்மையை உறுதிப் படுத்தும் செய்முறை.

data range properties : தரவு எல்லைப் பண்புகள்.

data rate : தரவு வேக விகிதம் : தரவுகள் அனுப்பப்படும் வேக வீதம். செய்தி வேகம் மூலம் அளவிடுவர். ஒரு விநாடிக்கு இத்தனை துண்மிகள் என்று கணக்கிடப்படும்.

data, raw : செப்பமிலாத் தரவு.

data record : தரவு ஆவணம் : ஒரு குறிப்பிட்ட பொருள் தொடர்பான பல்வேறு கூறு களைப்பற்றிய தரவுத் தொகுப்பு, தரவு கோப்பு ஒன்றின் பகுதி.

data reduction : தரவு இறுக்கம் : தரவுக் குறைப்பு : வகை செய்யப் படாத தரவுகளைப் பயனுள்ளதாகவும் இறுக்கமானதாகவும் எளிமையானதாகவும் மாற்றும் நடைமுறை. இம்முறையில் ஈடுகட்டல், அளவிடல், நெருடல், நீக்குதல், இறுக்குதல், சீர் செய்தல், வகைப்படுத்துதல்