பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/399

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

data switch

398

data transfer


படை ஒன்றின் கோப்புகளுக் கிடையிலான உறவு வடிவம் மற்றும் ஒவ்வொரு கோப்பிலும் உள்ள தரவு வகைகளுக்கிடையிலான உறவு.

data switch : தரவு விசை : ஒர்தொடரை இன்னொரு தொடருக்கு அனுப்புகிற விசைப் பெட்டி எடுத்துக்காட்டு : பன் முக அச்சடிப்பிகளை ஒரு கணினியுடன் இணைக்க அல்லது பன்முகக் கணினிகளை ஒரே அச்சடிப்பியுடன் இணைக்க இது பயன்படுகிறது. இதனைக் கையாலோ, தானியங்கு விசையினாலோ செய்யலாம்.

data table : தரவு அட்டவணை.

data tablet : தரவுப் பலகை : வரைபட வெளியிட்டு விசை களுக்கான கையால் இயக்கும் உள்ளிட்டுக் கருவி.

data terminal : தரவு முனையம் : கணினி முறைமை ஒன்றில் தரவுத் தொடர்பு இணைப்பில் தரவுகளை உள்ளிட அல்லது பெற உதவும் முனையம்,

data terminal equipment : தரவு முனையச் சாதனங்கள் : ஒரு முனையத்திலிருந்து தரவை அனுப்புவதற்கு உதவுவதற்குத் தேவையான சாதனம். எடுத்துக் காட்டு : தரவு வட்டு, தரவு ஆதாரம்.

data terminator : தரவு முடிவுறுத்தி : உட்பாட்டுத் தரவுகள் முடிவுற்று விட்டன என்பதைக் குறித்துக் காட்டும் ஒரு தனி வகைத் தரவு சாதனம். இதனைக் காவல் சாதனம் (Sentinal) அல்லது (Trailer) மோப்பச் சாதனம் என்றும் கூறுவர்.

data, test : சோச்தனைத் தரவு.

data traffic : தரவுப் போக்குவரத்து : கணினிப் பிணையம் வழியாக மின்னணுச் செய்திகளையும் தரவுகளையும் பரிமாறிக் கொள்ளுதல் போக்வரத்தின் அலைக்கற்றையாக அளக்கப்படுகிறது. போக்குவரத்தின் வேகம் ஒரு கால அலகில் எத்தனை துண்மிகள் (பிட்டுகள்) அனுப்பப்படுகிறது என்பதைக் கொண்டு அளக்கப்படுகின்றது.

data transaction : தரவுப் பரிமாற்றம்.

data transfer : தரவு மாற்றம் : கணினி அமைவுக்குள் தரவுகளை இடமாற்றம் செய்தல். செய்தித் தொடர்பு இணையத்தின் மூலம் இந்த மாற்றம் செய்யப்படுகிறது. தரவுகள் ஆதாரத்தில் தானாக அழிக்கப்படுவதில்லை என்பதால், இடமாற்றம் என்பது உண்மையில் ஒரு படியெடுப்பு பணியேயாகும்.