பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/401

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

data warehouse

400

datum


ஒரு சம்பளப பட்டியல் தரவு ஆதாரத்தில் ஒரு பணியாளரின் முகவரி அஞ்சல் குறியீடு முக்கியமாகப் பதிவாகியிருக்க வேண்டும். அஞ்சல் குறியீடு இலக்கங்களில அமைந்திருக்கறதா, ஆறு இலக்கங்களைக் கொண்டிருக்கிறதா (இந்திய அஞ்சல் குறியீடுகள் ஆறு இலக்கங்கள் கொண்டவை என்பதைத் தரவு ஆதாரம் சரி பார்த்தல் வேண்டும்.

data warehouse : தரவுக் கிடங்கு : ஒரு நிறுவனத்தின் அனைத்து வகைத் தரவுவுகளும் சேமித்து வைக்கப்பட்டுள்ள மிகப் பெரிய தரவுத் தளம். ஒரு தரவுக் கிடங்கு என்பது பல தரவுத் தளங்களை உள்ளடக்கியதாக இருக்கலாம். ஒரே தரவுக்கிடங்கு, பல்வேறு கணினிகளில் பகிர்ந்து சேமிக்கப்பட்டிருக்க முடியும். வேறு வேறு வடிவங்களில் வேறு வேறு மூலங்களிலிருந்து தரவுக் கிடங்குக்கு தரவு வந்து சேர முடியும். ஆனால், ஒரு வழங்கன் கணினி மூலமாகத் தரவை அணுக இயல வேண்டும். பயனாளருக்குத் தரவுக் கிடங்கை அணூகும் முறை வெளிப்படையானது. மிகஎளிய கட்டளைகள் மூலம் தரவு கிடங்கிலிருந்து தகவலைப் பெறவும் முடியும்.

data word : தரவுச் சொல் : ஒழுங்கமைக்கப்பட்ட, குறிப் பிட்ட எழுத்துகளின் தொகுப்பு. பொதுவாக முன்பே வரையறுக்கப்பட் எண், கணினியின் இணைப்புகளில் சேமிக் கப்பட்டு, தரவுவின் அடிப்படை அலகாக வேறிடத்துக்கு மாற்றப்படுகிறது.

data word size : தரவுச் சொல் நீளம்.

date : தேதி . நாள்.

date expansion : தேதி விரிவாக்கம்.

date field : தேதிப் புலம் , தேதி வகைப் புலம்.

date math : தேதி கணக்கு : தேதிகளைக் கொண்டு செய்யப்பபடும் கணிப்புகள். எடுதுக்காட்டு ஜனவரி 3 - 5 , பிப்ரவரி 4.

date stamping : டேடி முத்திரை : அன்றைய தேதியை ஓர் ஆவதைதில் தானாகவே பதிய செய்யும் முறை பயன்பாட்டு மென்பொருள் தொகுப்புகள் பலவற்றில் இவ்வசதவுண்டு.

date time : நாள் -நேரம்.

datum : தரவு உருப்படி : கணினிச் சொல் போன்ற தரவுவின் ஒரு அலகு.