பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/406

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

deallocate

405

debugger


கோப்பில் பணிபுரிந்துகொண்டு, 'B' என்ற கோப்பினை எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஆனால், மற்றொரு பயனாளர் 'B' கோப்பில் பணியாற்றிக் கொண்டு 'A' கோப்பை எதிர்பார்க்கிறார் என்றால் இருவரும் ஒருவரையொருவர் எதிர்பார்க்கின்றனர். இதனால், இருவர் பணியும் தேங்கிநிற்கிறது.

dealocate : விடுவி : ஒரு தரவை நினைவகத்தில் பதிவு செய் வதற்காக ஏற்கனவே ஒதுக்கி வைத்த நினைவக இருப் பிடத்தை விடுவித்தல்.

deallocation : விடுவிப்பு : இனி மேலும் தேவைப்படாத ஆதாரம் ஒன்றை நிரல் ஒன்றின் ஆதாரத்திலிருந்து விடுவித்தல் ஒதுக்கீடு என்பதற்கு எதிர் நிலையானது.

deamon : ஏவலாளி (பணி யேற்கும் நிரல்) d-BASE : தரவுத் தள நிரல் தொகுப்பு. ஆஸ்டன் டேட் (Ashton Tate) என்ற நிறுவனம் உருவாக்கிய தொகுப்பு.

debit card : பற்று அட்டை : கடை ஒன்றில் பொருள்களை வாங்கும் ஒருவர், பொருள்களுக்கான விலையைச் செலுத்தப் பயன்படுத்தும் வங்கி ஒன்றின் அட்டை (கடைக்காரரும் அந்தக் குறிப்பிட்ட வங்கியில் கணக்கு வைத் திருப்பார்).

deblock : ஆவணப்பிரிப்பு : ஒரு தொகுதியிலிருந்து ஆவணங்களைப் பிரித்தெடுத்தல்.

deblocking : தொகுப்பிலிருந்து பகுத்தல் : ஒரு தொகுப்பு அல்லது தருக்கவியல் ஆவணங்களின் குழு ஒன்றிலிருந்து தருக்கவியல் ஆவணம் ஒன்றைப் பிரித்தெடுத்தல்.

debounce : மறுபதிவு தவிர்ப்பு : கண்டுபிடிக்கப்படுவதைத் தவிர்க்க ஒரு விசை அல்லது இணைப்புக் குமிழ் அழிவு தரும் வகையில் மூடப்படுவதைத் தவிர்த்தல். ஒரு மின்குமிழின் இணைப்புகள் தடைப்பட கால அவகாசம் அளிப்பது ஒரு வகை வழியாகும்.

debug : தவறு நீக்குதல் : தவறு நீக்கி பிழை நீக்கி : நிரல் தொகுப்பு ஒன்றில் பிழைகள் அனைத்தையும் கண்டுபிடித்தல், இருக்குமிடத்தை உறுதி செய்தல், மற்றும் அவற்றை நீக்குதல், கணினியின் பிழையான இயக்கத்தைச் சீர் செய்தல்.

debugger : தவறு கண்டறி சாதனம் : பிழை நீக்கி : ஒரு செயல்முறையிலுள்ள தவற் றைக் கண்டறிய உதவுகிற