பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/410

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

decision making process

409

decision theory


சமநிலை இருப்பது பொறியமைவின் வடிவமைப்பில் முக்கியமான அங்கமாகும். செயல் முறைப்படுத்தும் நோக்கில் இருவழிகளில் முடிவெடுக்கப்படுகிறது. இது, என்றும் மாறாத விதிகள் மற்றும் நிபந்தனைகளின் தொகுதி. இன்னொன்று, கண்டுணர்வு முறை. இதில், விதிகள் அவ்வப்போது நிலைமைக்கேற்ப மாறுதலடையும். கண்டுணர்வு முறை, செயற்கை துண்ணறிவு, (Al) பொறியமைவுகளில் பயன்படுத்தப்படுகிறது.

decision making process : முடிவெடுக்கும் செய்முறை : ஒரு குறிப்பிட்ட நடவடிக்கைப் போக்கினைத் தேர்ந்தெடுப்பதில் ஏற்படும் அறிவுத் திறன், வடிவமைப்பு, தேர்வு நடவடிக்கைச் செய்முறை. decision structure : தீர்மானமான அமைப்பு : தேர்வு அமைப்பு போன்றது. decision support ; தீர்மான உதவி.

decision support system (DSS) : தீர்மானிக்க உதவும் பொறியமைவு (டிஎஸ்எஸ்)  : மற்றப் பொறியமைவுகளிலிருந்து இன்றியமையாத தரவுகளை எடுத்துக்கொண்டு, கட்டமைவற்ற முடிவுகளை எடுப்பதற்கு அந்தத் தரவுகளைப் பயன்படுத்த மேலாளர்களுக்கு உதவுகிற ஒரு மேலாண்மைத் தரவு பொறியமைவுப் பிரிவினைக் குறிக்கும் ஒரு பொதுவான சொல்.

decision symbol : முடிவுக் குறியீடு முடிவு காண் குறியீடு : ஒரு தேர்வினைச் செய்வதற்குத் தருக்கமுறை பயன்படுத்தப்படுகிறது. ஒரு செய்முறையினைக் குறிக்கப் பயன்படுத்தப்படும். இணைகர வடிவம் உள்ளீடுவெளியீடுகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. சாய்சதுர வடிவத் தொடர்வரிசை வரைபடக் குறியீடு.

decision table : முடிவுக்காண அட்டவணை : சிக்கல் ஒன்றை விளக்கும்பொழுது தோன்றும் அனைத்து நிலைமைகளையும் அவற்றுக்கான நடவடிக்கைகளையும் வரிசைப்படுத்தும் அட்டவணை. சில நேரத்தில் நடவடிக்கை ஒழுங்குமுறைப் பட்டியலுக்குப்பதிலாகப் பயன்படுத்தப்படுகிறது.

decision theory : முடிவுக்காண கோட்பாடு : ஒன்றுக்கு மேநற்பட்ட பல இயலக்கூடிய மாற்றுகளிடையே ஒன்றைத் தேர்வு செய்யும் முறையை விவரிக்கவும், அதனை அறிவுபூர்வ