பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/411

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

decision tree

410

decoder


மானதாக ஆக்கவும் உருவாக்கப்பட்ட உத்திகள் மற்றும் கொள்கைகளின் விரிவான வரிசை.

decision tree : முடிவுகாண் மரம் : எந்தவொரு சூழ்நிலையிலும் உள்ள மாற்றுகளை கூறும்படவிளக்கம்.

deck : தொகுப்பு : துளையிடப் பட்ட அட்டைகளின் தொகுப்பு.

declaration : அறிவுக்கை : செயல்முறையிலும் அதன் வகையிலும் பயன்படுத்தப்படவிருக்கும் மாறியல் மதிப்புருக்களின் (variable) மென் சாதனம் / தொகுப்பி / மொழி பெயர்ப்பி போன்றவற்றை செயல்முறைப்படுத்துபவர், அறிவிக்கை செய்ய வேண்டியிருக்குமிடத்து, சில செயல்முறைப்படுத்தும் மொழிகளில் பயன்படுத்தப்படும் உத்தி.

declaration : statement : அறிவிப்பு அறிக்கை நிரல் தொகுப்பின் மற்றக் கூறுகளின் தன்மையை விளக்கும் நிரல் தொகுப்பு ஒன்றின் பகுதி அல்லது வன்பொருள் ஒன்றின் சில பகுதிகளை சிறப்பான பயன்பாட்டுக்காக ஒதுக்கும் நிரல் தொகுப்புப் பகுதி.

declaration time : நிறுத்த நேரம் : நாடா ஒன்றிலிருந்து தரவு ஒன்றின் கடைப்பகுதியை படித்த அல்லது பதிவு செய்த பிறகு அதனை நிறுத்தத் தேவை யான நேரம்.

declarative knowledge : அறிவிப்பு அறிவு : பொருள்கள் பற்றியும், நிகழ்வுகள் குறித்தும், அவை ஒன்றுக்கொன்று எவ்வாறு தொடர்புடையன என்பது பற்றியும் உண்மைகளை அறிந்து கொள்வதன் மூலம் கற்றுக்கொள்ளுதல்.

declarative language : அறிவிப்பு மொழி : ஒரு பணியைச் செய்து முடிப்பதற்குக் கணினிக்குத் தேவைப்படும் துல்லியமான நடைமுறையைக் குறித்துரைப்பதிலிருந்து செயல் வரைவாளரை விடுவிக்கும் ஒரு செயல்வரைவு மொழி. பதிலாக, செயல்முறைப்படுத்துபவர், தான் என்ன செய்ய விரும்புகிறார் என்பதைச் செயல்வரைவுக்குத் தெரிவிக்கிறார்.

decode : குறி மொழி மாற்றம் : குறிமுறை நீக்கம் : குறியீடுகளினால் கூறப்பட்ட தரவு ஒன்றை மொழி மாற்றம் செய்தல் அல்லது உறுதி செய்தல், EnCOde என்ற சொல்லுக்கு எதிர்நிலையானது.

decoder : குறி மொழி மாற்றி : குறி முறை நீக்கி : பொருள் உணர்த்தும் சாதனம் : 1. பொருள்