பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/412

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

decollate

411

dedicated computer


உணர்த்தும் சாதனம், 2. தரப் படும் உள்ளிட்டுச் சமிக்கைகளுக்கு ஏற்ப ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வெளியீட்டு வழிகளைத் தேர்வு செய்யும் விசைகளின் அடித்தளப் பலகை.

decollate : தாள் பிரித்தல் : தொடர் படிவங்களின் பிரதி வரிசையாகச் சேர்த்து அவற்றுக்கிடையிலான கரித்தாள்களை அகற்றுதல்.

decompiler : பிரிப்பி : எந்திர மொழியை ஒர் உயர்நிலை ஆதார மொழியாக மாற்றுகிற செயல்முறை. இதன் மூலம் கிடைக்கும் குறியீடு புரிந்து கொள்வதற்குக் கடினமானதாக இருக்கக்கூடும். ஏனென்றால், மாறிலி மதிப்புருக்களும், வாலாயங்களும் பொதுவாக A0001, A0002 போன்ற பெயர்களில் இருக்கும்.

decompress : தளர்த்துதல் : திரட்சியாக்கம் செய்த தரவுகளை அது முதலிலிருந்த வடிவளவுக்கு மீண்டும் தளர்த்திக் கொண்டுவருதல்.

decrement : குறைவு : கீழிறக்கு : குறைப்பு : மதிப்பீடு அல்லது மாறக்கூடிய ஒன்று குறைக்கப்பட்டிருக்கும் அளவு. Increment என்பதற்கு எதிர் நிலையானது.

decryption : குறியீடுமாற்றம் : குறியீடுகளினால் தரப்பட்ட செய்தி ஒன்றிலிருந்து பொருள் உள்ள ஆதி செய்தியை உருவாக்குதல் அல்லது தெளிவான உரைப்படுத்துதல். குறியீட்டுக்கு நிலையானது.

DECUS : இலக்கக் கருவிக் கணினி : Digital Eqipment Computer Users Society என்பதன் குறும் பெயர். இலக்கக் கருவிக் கணினியைப் பயன்படுத்துவோர் குழு, அக்குழுவின் நோக்கம் இலக்கக் கருவிக் கணினி தொடர்பான கருத்துகளையும் தரவுகளையும் பரிமாறிக் கொள்வதாகும்.

dedicated : தனிப்பயனான ஒதுக்கப்பட்ட : தொகுப்பாணைக் கருவிகள் தொடர்பான அல்லது சிறப்பான பயன்பாட்டுக்காகத் தயாரிக்கப்பட்ட அல்லது ஒதுக் கப்பட்ட நடைமுறைகள்.

dedicated channel : ஒருநோக்க வழி : ஒரே நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படும் கணினி வழி அல்லது செய்தித் தொடர்பு வழி.

dedicated chip : தனிப்பயன் சிப்பு : ஒரு நோக்கச் சிப்பு : ஒரு பணியை மட்டுமே செய்கிற ஒரு சிப்பு. எடுத்துக்காட்டு : நினைவுப் பதிப்பான் சிப்பு.

dedicated computer : தனிப் பயன் கணினி : ஒதுக்கப்பட்ட கணினி : ஒரு குறிப்பிட்ட