பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/416

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

delay circuit

415

delimiter


delay circuit காலந்தாழ்த்தும் இணைப்பு : சமிக்கைகளை வழங்கும் பொழுது இடைவெளியை வேண்டுமென்றே அதிகமாக்கும் மின்னணுவியல் இணைப்பு.

delay line : சுணக்க வழி.

delay line storage : காலந்தாழ்ந்து வரும் வரிச்சேமிப்பகம் : காலந்தாழ்ந்து வரும் வரியைக் கொண்ட சேமிப்பகம். அதில் நிரலை மீண்டும் உருவாக்கி இணைப்பதற்கான வசதி உண்டு. ஆதிக் கணினிகளில் பயன்படுத்தப்பட்டது.

delete : நீக்கு நீக்குதல் : அழித்தல் : களம் அல்லது கோப்பு ஒன்றின் ஆவணத்திலிருந்து நீக்குதல் அல்லது அழித்தல் அல்லது போக்குதல். 2. தரவுகளைப் போக்கும் முறை.

delete all : அனைத்தும் அழி : அனைத்தும் நீக்கு.

delete file : கோப்பை நீக்கு.

delete key : நீக்கல் விசை : அழித்தல் விசை : 1. ஐபிஎம் மற்றும் ஒத்தியல்புக் கணினிகளில் பயன்படுத்தப்படும் ஒரு விசை. விசைப் பலகையில் Del என்று குறிக்கப்பட்டிருக்கும். பெரும்பாலான பயன்பாட்டுத் தொகுப்புகளில் இந்த விசையை அழுத்தியவுடன் சுட்டுக் குறியின் அடுத்துள்ள எழுத்து அழிக்கப்படும். ஆனாலும்வேறு சில பயன்பாடுகளில், தேர்வு செய்யப்பட்ட உரைப் பகுதி அல்லது வரைகலைப் படத்தை நீக்கிவிடும். 2. ஆப்பிள் மெக்கின்டோஷ் கணினிகளில் ஏடிபி மற்றும் விரிவாக்க விசைப்பலகைகளில் உள்ள விசை. செருகு குறிக்கு முந்தைய எழுத்தை அழிக்கும் அல்லது தேர்வு செய்யப்பட்ட உரைப் பகுதியையோ, வரைகலைப்பகுதியையோ அழிக்கும்.

delete record : ஏட்டை நீக்கு.

deletion record : நீக்கும் ஆவணம் : அடிப்படைக் கோப்பு ஒன்றில் உள்ள ஆவணம் ஒன்றுக்குப் பதிலாக அமையும் புதிய ஆவணம்.

delimit : எல்லையிடு : வரம்பிடல் ஒன்றின் வரம்புகளைத் தீர்மானித்தல். குறிப்பிட்ட மாறக்கூடிய ஒன்றின் உயர்ந்த பட்ச, குறைந்தபட்ச வரம்புகளைத் தீர்மானித்தலைப் போன்றது.

delimiter வரம்புக்குறி : வரம்பு காட்டி : எல்லைக்குறியீடு : சிறப்பு வடிவம். எடுத்துக் காட்டாக பட்டியல் ஒன்றில் மாறக்கூடிய பெயர்கள்