பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/417

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

delivery

416

demand report


அல்லது பொருள்களைப் பிரிக்கப் பயன்படுத்தப்படும். அல்லது தரவு வகைகளைப் பிரிப்பதுபோல ஒரு தொடர் வடிவங்களை மற்றொன்றிலிருந்து பிரிக்கப் பயன்படும் கால் புள்ளி அல்லது இடைவெளி.

delivery : வழங்குதல் : பட்டு வாடா நிரல் தொகுப்பை உரு வாக்கும் பணி வட்டத்தில் இறுதிச்செயல். இதில், உண்மையான தரவுகளைக் கையாளப் பயனாளருக்கு நிரல் தொகுப்பு அல்லது முறைமை வழங்குகிறது.

delivery challon : விநியோகத் தரவு.

Dell Computer Corporation : டெல் கணினிக் கழகம் : IBM ஒத்தியல்பு நுண்கணினிகளைத் தயாரிக்கும் ஒர் அமைவனம். இதனை 1984இல் மைக்கேல் டெல் என்பவர் டெக்சாஸ் மாநிலத்திலுள்ள (அமெரிக்கா) ஆஸ்டின் நகரில் நிறுவினார். லேப்டாப் (Laptop) முதல் உயர் முனை எந்திரங்கள்வரைப் பல்வேறு வகை நுண்கணினிகளை இது தயாரிக்கிறது.

Delphi Information Service : டெல்ஃபி தரவு சேவை : அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் உள்ள இணையச் சேவை நிறுவனம் வழங்கும் இணையத் தரவு சேவை.

delta modulation : டெல்டா அதிர்விணக்கம் : குரல் அலைகளின் மாதிரியை எடுத்து, அவற்றை இலக்கக் குறியீடாக மாற்றுவதற்கான உத்தி.

deltree : அகற்றாணை : ஒரு விவரக் குறிப்பேட்டில் அனைத்துக் கோப்புகளையும் அகற்றி விட்டு, துணை விவரக்குறிப்பேடுகளையும் அகற்றுகிற ஒர் உயர்நுட்ப DOS நிரல்.

demagnetization : காந்த நீக்கி : காந்த வட்டு அல்லது நாடாக்களில் சேமிக்கப்பட்ட தரவுகளை அழிக்கும் செயல்.

demand driven processing : தேவை முடுக்கு செயலாக்கம் : தரவு பெறப்பட்ட உடனேயே நடைபெறும் செயலாக்கம். இது போன்ற நிகழ்நேரச் (Realtime) செயலாக்கத்தின் காரணமாய் செயலாக்கப்படுத்தாத தகவலைச் சேமித்து வைக்கத் தேவையில்லாமல் போகிறது.

demand paging : பக்கமேற்றல் கோரிக்கை : நிகழ்சேமிப்பு முறைமைகளில், புறப்பக்கச் சேமிப்பகத்திலிருந்து உண்மையான சேமிப்பகத்திற்கு அப்பணியை நிறைவேற்றப்படும் நேரத்தில் மாற்றுதல்.

demand report : கோரல் அறிக்கை வேண்டிய அறிக்கை :