பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/421

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

derived class

420

descender


derived class : தருவித்த குழு : உட்குழு : தருவித்த வகுப்பு : பொருள் நோக்கிலான நிரலாக்கத்தில், ஒர் இனக்குழுவை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் இன்னோர் இனக்குழு. அடிப்படை இனக் குழுவின் (Base Class) அனைத்து பண்பியல்புகளையும் தருவித்த இனக்குழு கொண்டிருக்கும். அதே வேளையில் அடிப்படை இனக்குழுவில் இல்லாத புதிய உறுப்புகளையும், செயல்முறைகளையும் சேர்த்துக்கொள்ள முடியும். சில செயல்முறைகளை மாற்றியமைக்கலாம். மறுவரையறை செய்யலாம்.

derived font : தருவித்த எழுத்துரு ஏற்கெனவே இருக்கும் ஒர் எழுத்துருவை சற்றே மாற்றியமைத்து உருவாக்கப்படும் புதிய எழுத்துரு. இப்போது பயன்பாட்டில் உள்ள வரைகலை அடிப்படையிலான மெக்கின்டோஷ் இயக்க முறைமையில் ஏற்கெனவே நிறுவப்பட்டுள்ள எழுத்துருக்களின் உருவளவுகளை மாற்றி புதிய எழுத்துகளை உருவாக்க முடியும்.

derived relation : தருவித்த உறவுமுறை : ஏற்கெனவே வரையறுக்கப்பட்ட ஒன்றுக்கு மேற்பட்ட உறவு முறைகளின் அடிப்படையில் உருவாக்கப்படும் புதிய உறவுமுறை.

DES : டெஸ் : டிஇஎஸ் : தரவு மறையாக்கத் தரநிர்ணயம் எனப்பொருள்படும் Data Encryption Standard என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். 1976-ஆம் ஆண்டில் ஐபிஎம் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு அமெரிக்க அரசினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட கணினித் தரவு மறையாக்கத்துக்கான வரையறைகள். டெஸ், 56 துண்மி மறைக்குறியைப் பயன் படுத்துகிறது.

descendant : வாரிசு : 1. பொருள் நோக்கிலான நிரலாக்கத்தில் ஒர் இனக்குழுவிலிருந்து தருவிக்கப்பட்ட இனக்குழு அதன் வாரிசு என அழைக்கப்படுகிறது. தாத்தா, தந்தை, மகன் எனற உறவுமுறை யைப் போன்றது. 2. கணினிச் செயலாக்கத்தில், ஒரு குறிப்பிட்ட செயலாக்கம் (ஒரு நிரல் அல்லது ஒரு பணி) இன்னொரு செயலாக்கத்தினால் பயன்படுத் திக் கொள்ளப்படும்போது, மூலச் செயலாக்கத்தின் சில பண்பியல்புகளை அழைத்த செயலாக்கம் மரபுரிமையாகப் பெறும்.

descender : கீழிறங்கி : இறங்கி : மற்ற எழுத்துகளின் அடிக்கோட்டுக்கு கீழே இறங்கும் g