பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/422

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

decending

421

design costs


போன்ற சிறிய எழுத்துகளின் பகுதி. Kern என்றும் அழைக்கப் படுகிறது.

decending : இறங்குமுகம்.

descending order : இறங்குமுக வரிசை : அகர வரிசையிலோ அல்லது எண்முறையிலோ அதிக அளவிலிருந்து குறைந்த அளவுக்கு இறங்கி வரும் வரிசை. -

descending sort : இறங்குமுக வரிசையாக்கம் : ஒரு பட்டியலுள்ள உறுப்புகளை இறங்கு முக வரிசை முறைப்படுத்தல். Z இல் தொடங்கி A-யில் முடியு மாறும், எண்களைப் பொறுத்தவரை பெரிய எண்ணில் தொடங்கி சிறிய எண்ணில் முடியுமாறும் வரிசைப்படுத்தல்.

description : விவரிப்பு.

description, data : தரவு விவரிப்பு.

descriptive statistics : விவரிப்பு புள்ளியல் : மாற்ற விகிதம், சகவிகிதங்களின் விகிதம், திட்ட அளவு பிழைபாடு, கணித நடு எண், வரிசை போன்ற எண்ணளவிலான தரவுத் தொகுதி ஒன்றின் முக்கியத் தன்மைகளைக் குறிப்பிடும் எண் மதிப்புகள்.

descriptor விளக்கச்சொல்; வர்ணிப்பி : விவரிப்புச் சொல் தகவலைப் பட்டியலிடவோ அல்லது வகை வாரியாகப் பிரிக்கவோ உதவும் முக்கிய சொல். விசைச்சொல் என்றும் சில சமயம் அழைக்கப்படும்.

deserialize : தொடர்வரிசை நீக்கம் : ஒரு தொடர்வரிசைத் துண்மிக்கற்றையை ஒருபோகு துண்மிக்கற்றையாக மாற்றுதல்.

desh symbol : கீற்று குழூஉக் குறி.

design : வடிவாக்கம் : வடிவமைப்பு.

design aids : வடிவமைப்பு உதவிகள் : கணினி அமைப்பைச் செயல்படுத்த உதவும் நோக்கமுள்ள கணினி நிரலாக்கத் தொடர் அல்லது வன்பொருள் உறுப்புகள்.

design automation : வடிவமைப்பு தன்னியக்கம் : மின் சுற்று வடிவங்கள், புதிய கணினி மற்றும் பிற மின்னணுச் சாதனங்களின் வடிவமைப்பு மற்றும் உற்பத்தியில் கணினியைப் பயன்படுத்துதல்.

design costs : வடிவமைப்பு செலவுகள் : அமைப்புகளின் வடிவமைப்பு, நிரலாக்கத் தொடர் பயிற்சி, மாற்றல், சோதனை செய்தல், ஆவணப்படுத்துதல் போன்றவற்றுடன் தொடர்புள்ள செலவு.