பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/429

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

development time

428

device driver


பகம், ப்ராம் (Prom) நிரலாக்கத் தொடர்பொறி மற்றும் மின்சுற்று உருவாக்கி போன்றவை இதில் அடங்கும்.

development time : உருவாக்க நேரம் : புதிய நிரலாக்கத்தொடர் அல்லது மென்பொருளின் பிழையை நீக்கத் தேவைப்படும் நேரம்.

development tools : உருவாக்கக் கருவிகள் : உருவாக்க நிரலாக்கத் தொடர்கள் மற்றும் / அல்லது வன்பொருள் அமைப்பு பயன்படுத்து வதற்காக உருவாக்கப்பட்ட வன்பொருள் மற்றும் மென்பொருள் உதவிச் சாதனங்கள்.

device : சாதனம் : கருவி : 1. ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட எந்திர அல்லது மின்சார சாதனம், 2. கணினி மின் வெளிப்புறப் பொருள். 3. கணினிக்குள்ளே அல்லது அதனுடன் இணைக்கப்பட்டுள்ள கருவி.

device address : சாதன முகவரி : ஒரு கணினியின் ரேம் (RAM) நினைவகத்துள், நுண்செயலி அல்லது ஏதேனும் ஒரு புறச்சாதனத் தால் மாற்றியமைக்கக் கூடிய நினைவக இருப் பிடம். துண்செயலியினால் மட்டுமே மாற்றியமைக் கக்கூடிய நினைவக இருப்பிடங்களிலிருந்து சாதன முகவரிகள் மாறுபட்டவை. புறச்சாதனங்களும் இவற்றை மாற்றியமைக்க முடியும்.

device cluster : சாதனத் தொகுதி : தகவல் தொடர்புக் கட்டுப்பாட்டுப் பொறியுடன் பங்கு கொள்ளும் முகப்புத் தொகுதி அல்லது பிற சாதனங்கள்.

device code : சாதனக்குறியீடு : ஒரு குறிப்பிட்ட உள்ளீடு அல்லது வெளியீட்டுச் சாதனத்திற்கான எட்டு துண்மிக் குறியீடு.

device, communication : தரவு தொடர்புச் சாதனம்.

device dependent : சாதனம் சார்ந்த : ஒரு நிரலாக்கத்தொடர் அல்லது ஒரு குறிப்பிட்ட கணினியுடன் பயன்படுத்தப்பட வேண்டிய மொழி அல்லது அச்சுப்பொறி அல்லது மோடெம் போன்ற ஒரு குறிப்பிட்ட வெளிப்புறப் பொருள். உள்ளீடு அல்லது வெளியீட்டுடன் பயன்படுத்தப்படவில்லை யென்றால் செயல்படாதது .

device, direct access storage : நேரணுகு சேமிப்பகச் சாதனம்.

device driver : சாதன இயக்கி : ஒரு கணினியின் தவறுகை அடைவினை, முக்கியமாக நினைவுப் பதிப்பி எவ்வாறு