பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/434

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

diary management

433

dictionary programme


சேவையை வழங்கி வரும் ஒரு நிறுவனம், இணையம் (Internet), அக இணையம் (Intranet) ஆகியவற்றை அணுகுவதற்கு வழங்கி வரும் சேவை. செய்திச் சேவைகளையும், பங்குச் சந்தை விவரங்களையும் அணுக இச் சேவை துணைபுரியும்.

diary management : நாட்குறிப்புப் பதிவு மேலாண்மை.

diazo film : 'டியோசோ சுருள்' : நுண் சுருள் படிகள் எடுப்பதற்குப் பயன்படுத்தப்படும் படச்சுருள். இது, புறவூதா ஒளியில் மூலப்படச்சுருள் முன் காட்டப்பட்டு, ஒரு மாதிரியான படிகள் உருவாக்கப்படுகின்றன. படியின் ஊதா, ஊதா-கருப்பு அல்லது கருஞ் சிவப்பு நிறத்தில் இருக்கும்.

DIB : டிப்;டிஐபி : 1. சாதனம் சாரா துண்மிப் படம் என்று பொருள்படும் Device Independent Bitmap என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். ஒரு பயன்பாட்டு மென்பொருளில் உருவாக்கிய துண்மி வரைகலைப் படத்தை, அந்தப் பயன்பாட்டில் தோற்றமளிப்பது போலவே இன்னொரு பயன் பாட்டு மென்பொருளிலும் காண்பதற்கு ஏதுவான கோப்பு வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட படம். 2. கோப்பகத் வண்ணம் தகவல் தளம் என்று பொருள்படும் Directory Information Base என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். எக்ஸ். 500 முறைமையில் பயனாளர்கள் மற்றும் வளங்களின் பெயர்களைக் கொண்ட ஒரு கோப்பகம். இந்தக் கோப்பகம், ஒரு கோப்பக வழங்கன் முகவரால் (Directory Server Agent-DSA) பராமரிக்கப்படுகிறது.

dibble : தரவு குலைவு.

dibit : இருதுண்மி;டிபிட் : கீழ் வரும் இரும எண் வரிசை முறைகளில் ஏதாவது ஒன்று : 00, 01, 10 அல்லது 11.

dichotomizing search : இருமையாக்கும் தேடல் :

dictionary : அகராதி;அகர முதலி : ஒரு செயல்முறையில் பயன்படுத்தப் படும் முகப்புச் சீட்டுகள் அல்லது விடைக் குறிப்புகளையும், அவற்றின் தருக்க முறையான பொருள் விளக்கங்கள் பற்றிய ஒரு விவரிப்பினையும் கொண்டுள்ள ஒரு பட்டியல்.

dictionary, automatic : தானியங்கு அகரமுதலி.

dictionary programme : அகராதி நிரலாக்கத்தொடர் : எழுத்துப் பிழை சோதனை செய்யும் நிரலாக்கத் தொடர். சொல்