பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/435

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

diddle

434

differential analyzer


செயலாக்க அமைவுகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

diddle : டிடில்;தரவுக் குலைப்பு : தரவுகளை மாற்றுதல்.

die : அச்சு : மின்மப் பெருக்கிகள் அல்லது ஒருங்கிணைந்து மின் சுற்றுகளை உருவாக்கும் போது துண்டாக்கப்படும் அல்லது அறுக்கப்படும் வட்ட வடிவ அரைக்கடத்தி சிலிக்கான் தகட்டின் மிகச்சிறிய நாற் கோணத் துண்டு.

dielectric : மின்தாங்கு பொருள் : மின் விசையைக் கடத்தாமல், மின்விசை விளைவுகளை மட்டும் கடத்தக்கூடிய கண்ணாடி, ரப்பர், பிளாஸ்டிக் முதலிய பொருள்கள்.

DIF : டிஐஎஃப் : Data InterChange Format என்பதன் குறும்பெயர். தரவுக் கோப்புகளுக்கான ஒரு குறிப்பிட்ட தர நிர்ணயம். எதிர் காலத்தை உரைக்கும் பல நிரலாக்கத்தொடர்களில் பயன்படுத்தப்படுகிறது. ஒரு மென்பொருள் தொகுதியில் உருவாக்கிய கோப்புகளை முற்றிலும் வேறுபட்ட ஒரு நிறுவனம் உருவாக்கிய வேறு ஒரு மென்பொருளில் படிக்கப்படுவது.

difference : வேறுபாடு : ஒன்றைவிட மற்றொரு எண் அல்லது அளவு அதிகமாக அல்லது குறைவாக இருக்கும் அளவு.

difference engine : வேறுபாட்டு எந்திரம் : 1822இல் சார்லஸ் பாபேஜ் வடிவமைத்த எந்திரம். வேறுபாட்டு முறை என்னும் கணக்கிடும் செயலை இதில் எந்திரப்படுத்தினார்கள்.

differential : வேறுபாட்டளவை : மின்னணுவியலில் ஒரு குறிப்பிட்ட வகை மின்சுற்றைக் குறிப்பிடுகிறது. இந்த மின்சுற்று இரண்டு சமிக்கைகளுக் கிடையே உள்ள வேறுபாட்டைப் பயன்படுத்திக் கொள்ளும். வருகின்ற ஒர் உள்ளிட்டு சமிக்கையை வேறொரு உள்ளிருப்பு மின் அழுத்தத்துடன் ஒப்பிடாது.

differential analyzer : வேறு பாட்டளவையியல் பகுப்பாய்வுக் கருவி : வேறுபாட்டளைவையியல் சமன்பாடுகளுக்குத் தீர்வு காண வான்னேவார் புஷ் (MIT, 1930களில்) உருவாக்கிய ஒத்தியல்புக் கணிப்புச் சாதனம். இவை 12 எண்ணிக்கைக்குக் குறைவாகவே தயாரிக்கப்பட்டன.

எனினும், இவை இரண்டாம் உலகப்போரின் போது ஏவுகணை அட்டவணை களைக் கணிக்கத் திறம்படப் பயன்படுத்தப்பட்டன. இந்த எந்திரம் ஒர் அறை முழு