பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/437

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

digit

436

digital camera


களைத் தொகுத்து அனுப்பி வைக்கப்படும் ஒரு செய்தி. அஞ்சல் பட்டி யலுக்கு ஒர் இடையீட்டாளர் இருப்பின் அச்சுருக்கத் தொகுப்பு திருத்திச் சீரமைக்கப்படலாம்.

digit : இலக்கம்;எண்ணியல் : ஒரு அளவைக் குறிப்பிடப் பயன்படுத்தப் படும் எண் முறைக் குறியீடு. பதின்ம முறை யில் 0 முதல் 9 வரை பத்து இலக்கங்கள் உள்ளன.

digital ;எண்ணியல்;எண்மம்;இரு நிலை உரு;இலக்க முறை;இலக்க வகை : இயக்கம், நிறுத்தத்தினைக் குறிப்பிட 1 அல்லது 0-க்களாகத் துண்மி குறியீடு இட்டு தரவைக் குறிப்பது பற்றியது. கணினி மற்றும் செய்தித் தரவுத் தொடர்பு தொழில் நுட்பத்தில் மிகவும் இன்றியமையாதது.

digital audio tape : இலக்கமுறை ஒலிநாடா.

digital audio/video connector : இலக்க முறை கேட்பொலி) /ஒளிக் காட்சி இணைப்பி : சில உயர்திறன் ஒளிக்காட்சி அட்டைகளிலும் (தொலைக்காட்சி டிவி) தடத்தேர்வு அட்டைகளிலும் இருக்கும் இடைமுகம். இதன் மூலம் இலக்கமுறை கேட்பொலி மற்றும் ஒளிக்காட்சி சமிக்கைகளை ஒரே நேரத்தில் அனுப்ப முடியும். டிஏவி இணைப்பி எனக் சுருக்கமாவும் அழைப்பர்.

digital camera : இலக்கமுறைப் படப்பிடிப்புக் கருவி : எண்ணுருப் படமாக்கி : வழக்கமான ஃபிலிமிற்குப் பதிலாக மின்னணு முறையில், பட உருவங் களைப் பதிவுசெய்யும் கருவி. இக் கருவியில் மின் எற்றப்பட்ட சாதனம் (Charge-Coupled Device-CCD) உள்ளது. இயக்குநர், படக் கருவியின் மூடியைத் திறக்கும் போது, லென்ஸ் வழியாக படஉருவத்தை சிசிடி உள் வாங்கு கிறது. பிறகு அப்பட உருவம், படக் கருவியின் உள்ளே இருக்கும் நிலை நினைவகம் அல்லது நிலைவட்டில் சேமிக் கப்படுகிறது. படக்கருவியுடன் தரப்படும் மென்பொருளின் உதவியுடன் பதியப்பட்ட பட உருவத்தை

கணினியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். வருடுபொறி மற்றும் அது போன்ற உள்ளிட்டுக் கருவிகள் மூலம் கணினியில் கையாளும் படங்களைப் போன்றே படப் பிடிப்புக் கருவி மூலம் கணினியில் பதிவு செய்யப்பட்ட படத்தையும் நாம் விரும்பியவாறு திருத்தி, சீரமைத்து வைத்துக் கொள்ளலாம்.