பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/441

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

digital recording

440

digital simultaneous


digital recording : இலக்கமுறை பதிவு செய்தல் : காந்தப் பதிவு ஊடகத்தில் நுட்பமான புள்ளிகளாக தகவலைப் பதிவு செய்யும் நுட்பம்.

digital repeater : இலக்கமுறை மீட்டுருவாக்கப் பொறி : இலக்கமுறை துடிப்புகள் நீண்ட கடத்திகள் வழியாகச் செல்லும் போது பலவீனமடையும் என்பதற்காக அவற்றை மீண்டும் உருவாக்க செய்தி தரவுத்தொடர்புகளின் பாதையில் அமைக்கப்படும் சாதனம்.

digital research : இலக்கமுறை ஆராய்ச்சி : (இலக்கமுறை ஆராய்ச்சி நிறுவனம், மான்டெரி, சிஏ) கேரி கில்டால் என்பவர் 1976இல் நிறுவிய மென் பொருள் நிறுவனம். இது தனது நுண்கணினிக் கட்டுப்பாட்டுச் செயல்முறை (CP/M) மூலம் நுண்கணினிப் புரட்சியில் முன்னணியில் திகழ்ந்தது. இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளில் GEM பலகணிச் சூழல், FlexOS இயல்புநேரச் செயற்பாட்டு முறை, DR DOS ஆகியவை முக்கியமானவை. இந்த நிறு வனத்தை 1991இல் நோவல் என்ற நிறுவனம் விலைக்கு வாங்கியது.

digital signal : இலக்கமுறை சைகை;இலக்கமுறை சமிக்கை : கணினி புரிந்து கொள்ளக்கூடிய வகையில் இரும எண் தரவுகளாக (1, 0) குறியீட்டை அனுப்பிவைக்கும் இரண்டு மின்சார நிலைகள். ஒவ்வொரு 1-ம் 0 வும் ஒரு துண்மி. 8 முதல் 10. துண்மிகள் சேர்ந்து ஒரு பைட் அல்லது ஒரு எடடியல் எழுத்து உருவாகிறது. இலக்கமுறை சமிக்கையை அலைவு முறைக்கு மாற்றவும், அலைவு முறையிலிருந்து கணினி புரிந்து கொள்ளும் இலக்க முறைக்கு மாற்றவும் அதிர்விணக்கி (மோடெம்) பயன்படுத்தப்படுகிறது.

digital signal processing : இலக்கமுறைக் குறிப்பு செயலாக்கம்.

digital signature : மின்னணுக் கையொப்பம்;இலக்கமுறைக் கையொப்பம்; எண்ணுருக் கையொப்பம் : மின்னணு ஆவணங்களில் பயன்படுத்தப் இரகசியக் குறியீட்டு முறைக் கையொப்பம். ஒருவர் தானே உரிமைச் சான்றளிக்கும் முறையாகும். மறையாக்கத்தையும் (encryption), இரகசிய சான்றுறுதிக் குறியீட்டையும் அடிப்படையாகக் கொண்டது.

digital simultaneous voice and data : இலக்க முறையில் ஒரே நேரத்தில் குரலும் தரவும்