பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/453

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

disaster planning

452

discrete cosine transform


disaster planning : பேரிடர் திட்டப் பதிகை.

disaster recovery : இடர் மீட்சி : ஒர் இடர்ப்பாட்டிலிருந்து முழுமையான செயற்பாட்டிற்கு மீள்வதற்கான மேலாண்மை உத்தி. (எடுத்துக்காட்டு : நெருப்பு அல்லது தளச் சேதம்). இது, அனைத்தையும் கூடுதல் படியெடுத்து வைத்துக் கொள்வதையும், வேறிடங்களில் சேமித்து வைப்பதையும் உள்ளடக்கும்.

disaster recovery specialist : சேதமீட்புச் சிறப்பாளர்;இடர் மீட்சி வல்லுநர்.

disc : வட்டு : (குறிப்பாக ஒளி வட்டு) : வட்டினைக் குறிக்க Disc, Disk ஆகிய இரண்டு சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. லேசர் ஒளிக்கதிர் மூலம் எழுத/படிக்க முடிகிற, காந்தத் தன்மையற்ற உலோகப் பூச்சுள்ள பிளாஸ்டிக் வட்டுகள் Disc என்ற சொல்லால் குறிப்பிடப்படுகின்றன. அவையல்லாத ஏனைய வட்டுகள், நெகிழ் வட்டு, நிலை வட்டு, ரேம் வட்டு (நினைவகத்தில் உருவாக்கப்படும் மெய்நிகர் வட்டு) ஆகியவை Disk என்ற சொல்லால் குறிக்கப்படுகின்றன. லேசர் வட்டு, குறுவட்டு, கேட்பொலி/ஒளிக்காட்சி வட்டு, டிவிடி வட்டு ஆகியவை பெரும்பாலும் Disc என்று குறிக்கப்படுகின்றன.

disclaimer : ஒதுங்கல் உரிமைத் துறப்பு : அந்தப் பொருளைப் பயன்படுத்துவதனால் ஏற்படும் வணிக இழப்புகளுக்கு விற்பனையாளர் பொறுப்பல்ல என்று பல மென்பொருள்களுடன் வரும் நிபந்தனை.

disconnect : துண்டிப்பு;துணி (த்தல்) : ஒரு தகவல் தொடர்பு இணைப் பினைத் துண்டித்தல்.

discrete : தனியான : உதிரி எழுத்துகள் அல்லது துண்மிகளைப் போன்ற தனிப்பட்ட பொருட்களால் குறிப்பிடப்பட்ட அல்லது தனிப்பட்ட பொருள்கள் தொடர்பான.

discrete component : தனி உறுப்பு : ஒரே ஒரு செயலை மட்டும் செய்கின்ற மின்சாதனப் பொருள். ஒருங்கிணைந்த மின் சுற்றுக்கு மாறானது.

discrete cosine transform : பிரி நிலைக்கிடை கோண உருமாற்றம் : படக்கூறுகள் (Pixels) அலையுருவங்கள் போன்ற தரவுகளை அதிர்வெண் தொகுதியாக மாற்றுகிற படிநிலை முறை. இதில் முதல் அதிர்வெண்கள் மிகவும் பொருள் பொதிந்தவை. கடைசி அதிர்