பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/456

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

disk copying

455

disk duplication


disk copying : வட்டு நகலெடுத்தல் : ஒரு வட்டில் உள்ள அனைத்து உள்ளடக்கங்களையும் வேறொரு வட்டிற்கு மாற்றும் செயல்.

disk crash : வட்டுப் பழுது;வட்டுக் கேடு : பயன்படுத்த முடியாத தாகிப்போன வட்டு அலகின் நிலை. வட்டு இயக்கியின் படிக்கும்/எழுதும் முனைக்கும் தட்டின் மேற்பகுதிக்கும் இடையில் தொடர்பு ஏற்பட்டதால் இது ஏற்படுவதுண்டு.

disk directory : வட்டு விவரக் குறிப்பேடு : கணினியின் ஒவ்வொரு கோப்பும் அல்லது செயல்முறையும் வட்டில் சேமித்து வைக்கப்பட்டிருக்கிற ஒரு பட்டியல். விவரக் குறிப்பேடு, பொதுவாக ஒரு வட்டின் தொடக்கத்தில் சில தடங்களில் பதிவு செய்கிறது.

disk doctor : வட்டுப் பொருளறி சாதனம் : ஒரு வட்டில் என்னென்ன சேமித்து வைக்கப்பட்டிருக்கின்றன என்பதைப் பயனாளர் ஆராய்ந்தறிய உதவுகிற ஒரு செயல்முறை. ஒரு வட்டு சேதமடையுமானால், அதிலுள்ள மதிப்புமிக்க தரவுகளை மீட்பதற்கு இது பயன்படுகிறது.

disk drive : வட்டு இயக்கி, வட்டு செலுத்தி : கணினி பயன் படுத்துவதற்காக, நினைவகத்தில் வட்டிலிருந்து தரவுகளைப் படிக்கும் சாதனம். கணினியின் நினைவகத்திலிருந்து சேமிப்பதற்காக தட்டில் எழுதவும் செய்யும்.


வட்டு இயக்கி

வட்டு இயக்கி

disk drive controller : வட்டு இயக்ககக் கட்டுப்படுத்தி.

disk drive, floppy : நெகிழ்வட்டு இயக்ககம்.

disk dump : வட்டுக் குவியல் : அறிக்கை உருவமைவாக்கம் இல்லாமல் வட்டின் உள்ளடக்கங்களை அச்சுப்படியாக எடுத்தல்.

disk duplication : வட்டு பிரதியெடுத்தல்;வட்டு நகலாக்கம் : ஒரு காந்த வட்டில் பதியப்பட்டுள்ள தரவு வேறொரு