பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/460

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

disk unit enclosure

459

dispersion


disk unit enclosure : வட்டு அலகு அடைப்பி : ஒன்று அல்லது மேற்பட்ட வட்டு இயக்கிகளையும் மின்சக்திச் சாதனத்தையும் வைப்பதற்கு வடிவமைக்கப்பட்ட பெட்டி.

dispatch : அனுப்பு : அடுத்த வேலை என்ன என்று தேர்ந்தெடுத்து அதை செயலாக்கம் செய்ய தயாராக இருத்தல்.

dispatcher : விரைவுச் செயல்முறை : ஒர் இடையீடு ஏற்பட்ட பிறகு, நடப்பு இயக்கப்பணித் தொகுதியிலிருந்து நிறைவேற்றுவதற்காக அடுத்த பணியைத் தேர்ந்தெடுக்கிற கட்டுப்பாட்டுச் செயல்முறை.

dispatching : விரைவுச் செயலாக்கம் : உருத்தெளிவு, வண்ணம், வரைகலைத் திறம் பாட்டினைக் கட்டுப்படுத்துவதற்கு, கண்காட்சி அலகினை மின்னணுவியல் முறையில் கட்டுப்பாட்டுடன் இணைக்கிற ஒரு பலகை.

dispatching priority : அனுப்பும் முன்னுரிமை : பல பணிகளின் சூழ்நிலையில் மைய செயலக அலகில் பயன்படுத்துவதற்காக முன்னால் அனுப்பப்படுவனவற்றை முடிவு செய்யும், பணிகளுக்கு ஒதுக்கப்படும் எண்கள்.

dispatch table : அனுப்புகை அட்டவணை : குறுக்கீடு (interrupt) களைக் கையாளும் செயல்கூறுகள் (functions) அல்லது துணை நிரல்களின் முகவரிகளைக் கொண்ட அட்டவணை. ஒரு குறிப்பிட்ட சமிக்கை கிடைத்தவுடனோ, அல்லது சில குறிப்பிட்ட சூழ்நிலைகளிலோ நுண்செயலி, அட்டவணையில் குறிக்கப்பட்ட குறிப்பிட்ட துணை நிரலைச் செயல்படுத்தும்.

disperse : கலைத்தல்;பிரித்தல் : ஒரு குறிப்பிட்ட தரவுத் தொகுதியைப் பிரித்து வெவ்வேறு இடங்களில் கிடைக்கும்படி செய்தல். எடுத்துக்காட்டாக அட்டவணைக் கோப்பிலுள்ள ஏடுகளில் (records) உள்ள புலங்களைப் (fields) பிரித்து, வெளியீட்டின் போது வெவ்வேறு இடங்களில் கிடைக்கச் செய்தல்.

dispersed data processing : பரவலான தரவு செயலாக்கம்.

dispersed intelligence : பரவலாக்கப்பட்ட அறிவுத்திறன் : கணினி ஆற்றலை கட்டமைப்பு முழுவதும் பரவலாக்கப்பட்ட கடடமைபபு.

dispersion : பரப்பீடு : முரண்பாட்டு அளவை. பல்வேறு பரப்