பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/467

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

dithering

466

division by zero


dithering : குழப்ப நிலை : 1. ஒரு புதிய நிறத்தை உருவாக்க பலநிறப் புள்ளிகளை ஒன்று கலத்தல். புள்ளிகள் சிறியதாகவும், குறைவான இடைவெளியுடனும் அமைந்து ஒன்றாக இருப்பதுபோல் கண்களைக் குழப்பும். 2. உருவம் மற்றும் சாதனத்தின் உருவாக்கல் திறன் ஒன்றாகும் போது காட்சியின் நெருக்கத்தை அதிகரிக்க உதவும் வரைகலை துட்பம்.

divergence : விலகல் : நேர் பாதையினின்று விலகிச் செல்லல். குறியிலக்கை விட்டு விலகிச் செல்லல். 1. கணினியின் வண்ணத் திரையில் அடிப்படை நிறங்களான சிவப்பு, பச்சை, நீலம் ஆகியவற்றின் மின்னணுக் கற்றைகள் திரையின் ஒரு குறித்த இலக்கில் ஒருங்கிணைந்து குவியாதபோது இத்தகைய விலகல் ஏற்படுகிறது. 2. விரிதாள் பயன்பாடு போன்ற மென்பொருள்களில் ஒரு நிரலில் தவறான ஒரு வாய்பாட்டின் காரணமாக சுழல்தன்மை ஏற்பட்டு, கணக்கீடு, திரும்பத் திரும்ப செய்யப்படும் நிலை ஏற்படலாம். ஒவ்வொரு கணக்கீட்டின் போதும் கிடைக்கும் முடிவு, விடையை விட்டு விலகிவிலகிச் செல்லும்.

dividend : வகு எண்;ஆதாயப் பங்கு.

division : பிரிவு.

division by zero : சுழியால் வகுத்தல்; பூச்சியத்தால் வகுத்தல் :

வகுத்தல் கணக்கீட்டில் ஒர் எண்ணை பூஜ்யத்தால் (0 சுழி) வகுக்க முயலும்போது ஏற்படும் பிழைதிலை. எந்தவொரு எண்ணையும் பூச்சியத்தால் வகுத்தால் எண்ணிலி (infinity) விடையாகும். கணித முறைப் படி கணிக்க முடியாத மதிப்பாகும் இது. அதாவது ஒரு வகுத்தல் கணக்கீட்டில் விகுதி (denominator) மிகச் சிறிதாகிக்கொண்டே போனால் கிடைக்கும் ஈவு பெரிதாகிக் கொண்டே போகும். விகுதி ஏறத்தாழ பூச்சியத்துக்குச் சமமான மிகச்சிறிய மதிப்பாக இருக்குமெனில், ஈவானது ஒரு கணினியால் கணிக்க முடியாத அளவுக்குப் பெரிய எண்ணாக இருக்கும். எனவே, பூச்சியத்தால் வகுக்கும் கணக்கீட்டை கணினி அனுமதிப்பதில்லை. எனவே, நிரலர் இது போன்ற சூழ்நிலை ஏற்படாதவாறு தம்முடைய நிரலில் பாதுகாப்பு வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லையேல் நிரல் செயல்படாமல் பாதியில் நிற்கும்.