பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/471

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

doctype

470

document centric


கணினியைப் போலப் பயன்படுத்த விரும்பலாம். ஆனால் அதற்கு மேசைக் கணினியின் காட்சித்திரை, விசைப்பலகை, சுட்டி பற்றும் பிற சாதனங்களைப் பயன்படுத்திக் கொள்ளும் வசதி வேண்டும். இவ்வசதிகளைக் கொண்டது தான் பொருத்து நிலையம். இக்கருவியில் ஒரு மடிக்கணினி, காட்சித் திரை, விசைப்பலகை, அச்சுப்பொறி, சுட்டி ஆகியவற்றைப் பொருத்திக்கொள்ள வசதி இருக்கும்.

doctype : ஆவணவகை;ஆவண இனம் : எஸ்ஜிஎம்எல் (SGML) ஆவணத்தின் தொடக்கத்தில் குறிப்பிடப்படும் அறிவிப்பு. ஒவ்வொரு எஸ்ஜிஎம்எல் ஆவணத்திலும் ஆவண வகையின் வரையறை (Document Type Difinition) குறிப்பிடப்பட வேண்டும்.

document : ஆவணம் : 1. கையால் எழுதப்பட்ட, தட்டச்சு செய்யப்பட்ட அல்லது அச்சிடப்பட்ட தரவுகள் கொண்ட காகிதம். 2. தரவு அல்லது உரை நடையின் தொகுதியைக் குறிப்பிடுதல் அது மனிதர்கள் படிப்பதாக இருந்தாலும் அல்லது எந்திரம் படிப்பதாக இருந்தாலும்.

documentation : ஆவணப்படுத்தல்;ஆவணமாக்கம்;ஆவணச்சான்று : 1. அமைப்பு ஆய்வு மற்றும் நிரலாக்கத் தொடர் அமைத்தலில், அமைப்பு, தயாரிக்கப்பட்ட நிரலாக்கத்தொடர்கள் மற்றும் பின்னர் செய்ய வேண்டிய மாற்றங்கள் உள்ளிட்டவற்றை பற்றி விவரிக்கும் ஆவணங்கள். 2. குறிப்புகள், கருத்துரைகள் போன்ற வடிவில் உள்ளே அமைக்கப்படும் ஆவணப்படுத்தல்.

documentation aids : ஆவணப்படுத்தல் உதவிப்பொருள்கள் : ஆவணப் படுத்தல் செயல்முறைகளைத் தானியங்கியாகச் செய்ய உதவும் பொருள்கள். நிரலாக்கத் தொடர் வர்ணனை குறிப்புகள், ஒடு படங்கள், ஹிப்போ நிரலாக்கத் தொடர் ஒட்டங்கள், போலி குறியீடுகள் போன்றவை.

documentation and versioning : ஆவணமாக்கமும் பதிப்பாக்கமும்.

documentation, programme : நிரல் ஆவணமாக்கல்.

document centric : ஆவணமையமானது : இது ஒர் இயக்க முறைமையின் பண்புக்கூறு ஆகும். முன்பிருந்த இயக்க முறைமைகள் நிரலை மைய மாகக் கொண்டவை. அதாவது, ஒர் ஆவணத்தைத் திறக்குமுன் அந்த ஆவணம் உருவாக்கப்பட்ட பயன்பாட்டுத் தொகுப்