பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/472

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

document close button

471

documentor


பைத் திறக்க வேண்டும். பிறகு அதனுள்ளேதான் ஆவணத்தைத் திறக்க வேண்டும். ஆனால் இப்போதுள்ள மெக்கின்டோஷ்,விண்டோஸ் இயக்க முறைமைகளில் ஒர் ஆவணத்தைத் திறப்பதற்குக் கட்டளை தந்தால் போதும். அந்த ஆவணம் உருவாக்கப்பட்ட பயன்பாடு தானாகவே திறக்கப்பட்டு அதனுள்ளே ஆவணம் திறக்கப்படும். எடுத்துக்காட்டாக,விண் டோஸ் இயக்கமுறைமையில் எம்எஸ்வேர்டு தொகுப்பில் உருவாக்கப்பட்ட ஒர் ஆவணத்தை சுட்டியால் இரட்டை கிளிக் செய்து திறந்தால்,வேர்டு தொகுப்பு, தானாகவே திறக்கப்பட்டு அதனுள்ளே வேர்டு ஆவணம் திறக்கப்படும். ஒர் ஆவணம் எந்தத் தொகுப்பில் உருவாககபபடடது என்பதை அறியாமலே அந்த ஆவணத்தைப் பயனாளர் திறக்கமுடியும்.

document close button:ஆவண மூடு பொத்தான்.

Document Content Architecture(DCA);ஆவண உள்ளடக்க உருவமைவு (டிசிஏ):மாறுபட்ட உருவமைவுகளுக்கிடையே தரவுகளை(வாசகங்கள்) மாற்றுவதற்குப் பயன்படும் ஒரு வாசகக் கோப்பு உருவமைவு.

document distribution:ஆவணப் பகிர்மானம்.

document file:ஆவணக்கோப்பு:ஒரு சொல் பகுப்பி மூலம் உருவாக்கப்பட்ட கோப்பு. இது,ஒரக் கோடுகள்,உள்வரிகள்,தலைப்புகள், அடிக் குறிப்புகள் ஆகியவற்றுடன் உருவமைவு செய்யப்பட்டிருக்கும்.

document image processing:ஆவணப் படிமச் செயலாக்கம்.

document interchange architecture(DIA):ஆவண மாறுகொள் கட்டமைப்பு.

document management:ஆவண மேலாண்மை:ஒர் நிறுவனத்துக்குள் கணினிவழியாகப் பரிமாறிக் கொள்ளப்படும் மின்னணு ஆவணங்களை உருவாக்குதல்,வினியோகித்தல் போன்ற பணிகளுக்கான கோப்பு மேலாண்மை அமைப்பு.

document mark:ஆவணக் குறியீடு:நுண்வரைகலையில்,நுண் படச்சுருளின் ஒவ்வொரு சட்டகத்திலுள்ள ஒரு சிறிய ஒளியியல் வடிவம். இது சட்டகங்களைத் தானாகவே எண்ணுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது.

document minimise button:ஆவணச் சிறிதாக்கு பொத்தான்.

documentor:ஆவணப்படுத்தி:நிரலாக்கத் தொடர்,ஒடு படங்கள், உரைநடைப்பொருள் மற்றும் பிற பட்டியல் அல்லது