பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/474

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

document window

473

domain name


உயர்தர வடிவாக்கம் தொடர்பான தொடரிலக்கணம் பற்றியது. தொடரிலக் கணத்துக்கான எஸ்ஜிஎம்எல் வரையறைக்குச் செழுமை சேர்ப்பதாய் அமையும்.

document window : ஆவணச் சாளரம் : மெக்கின்டோஷ், விண்டோஸ் போன்ற வரைகலைப் பணித்தளத்தில் எந்தவொரு பயன்பாட்டுத் தொகுப்பும் ஒரு சாளரத்தினுள்ளேதான் காட்சியளிக்கும். அதுபோலவே அத்தொகுப்பில் ஒர் ஆவணத்தை உருவாக்குதலும் பார்வையிடுதலும் ஒரு தனிச் சாளரத்தி னுள்ளேதான் நடைபெறும். சில தொகுப்புகளில் இவையிரண்டும் இணைந்து ஒரே சாளரமாகத் தோற்றமளிப்பதும் உண்டு. வரைகலைப் பணித்தளத்தில் ஒர் ஆவணம் தோற்றமளிக்கும் சாளரம் ஆவணச்சாளரம் எனப்படுகிறது.

docuterm : ஆவண வாசகம் : ஆவணத்தின் உள்ளடக்கங்களை அடையாளங் காண்பதற்கு ஒரு வாசக ஆவணத்தில் பயன் படுத்தப்படும் சொல் அல்லது சொற்றொடர்.

DOE : மின்னணுவியல் துறை : Department of Electronics என்பதன் குறும்பெயர். மின்னணுவியல் துறை என்று பொருள்படும்.

Do loop : செய் மடக்கி : பெரும்பாலான கணினி மொழிகளில், ஒரு குறிப்பிட்ட பணியைத் திரும்பத் திரும்பப் பலமுறை செயல்படுத்த கட்டுப்பாட்டு மடக்கி (control loop) என்னும் கட்டளை வடிவம் பயன் படுத்தப்படுகின்றது. For.. Next, While.. Wend, Do.. Enddo போன்ற பல்வேறு கட்டளை வடிவங்கள் உள்ளன. DO என்னும் மடக்கி, ஃபோர்ட்ரான், விசுவல்பேசிக், சி, சி++, சி ஷார்ப் ஜாவா மொழிகளில் உள்ளது.

domain : செயற்களப்பகுதி : 1. தொடர்புகளுடைய பொருள்கள் தமது மதிப்புகளைப் பெறும் தரவுத் தொகுதி. 2. ஆர்வம் உள்ள எந்தச் சிக்கல் துறையும் இதில் அடங்கும்.

domain expert : செயற்கள வல்லுநர் : ஒரு நிபுணத்துவப் பொறியமைவை உருவாக்க உதவுகிற ஒரு மனித வல்லுநர்.

domain knowledge : கள அறிவு : பயன்பாட்டுச் சூழ்நிலையின் அறிவு.

domain name : களப் பெயர்;தினைப் பெயர் : ஒரு பினையத்தில் ஒரு

குறிப்பிட்ட