பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/475

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

domain name address

474

dopant


வழங்கன் அல்லது புரவன் கணினியின் உரிமையாளரை அடையாளம் காட்டும் பெரும் படிமுறை அமைப்பில் அம்முகவரி அமையும். எடுத்துக் காட்டாக www chennai telephones. gov. in என்ற முகவரி இந்தியாவிலுள்ள (in), அரசுக்குச் சொந்தமான (gov), சென்னைத் தொலைபேசி நிறுவனத்தின் வலை வழங்கன் (web server) என்பதைக் குறிக்கிறது. in என்பது புவியியல் பெரும் களம் (major geographical domain) எனவும், gov என்பது வகைப்படு பெருங்களம் எனவும், chennai telephcnes என்பது உட்களம் (minor domain) எனவும் அறியப்படுகிறது.

கணிமொழி. வணி, தமிழ். வலை, யாகூ. நிறு. இந்

என்பதுபோன்று தமிழ்மொழியிலேயே களப் பெயர்களை அமைத்துக் கொள்ளும் தொழில் நுட்பமும் வந்து விட்டது.

domain name address : களப்பெயர் முகவரி : இணையத்திலோ அல்லது ஏதேனும் ஒரு டீசிபீ/ஐபீ பிணையத்திலோ இணைக்கப்பட் ஒரு கணினியின் முகவரி. குறிப்பாக, ஒரு வழங்கன் கணினியை அல்லது நிறுவனத்தை அடையாளம்காண, எண்களுக்குப் பதிலாக சொற்களை முகவரியாகப் பயன்படுத்தும் முறை.

domain name server : களப்பெயர் வழங்கன்.

domain name system : களப்பெயர் முறைமை.

Domain Naming Services (DNS) "களப் பெயரிடு சேவை.

domain tip : கள முனை : இலக்கமுறை தரவைச் சேமிக்க மெல்லிய திரைப்படங்களைப் பயன்படுத்தும் ஒரு வகை சேமிப்புச் சாதனம்.

dominant carrier : முனைப்பு நிலை ஊர்தி : ஒரு குறிப்பிட்ட அங்காடி யின் பெரும்பகுதிமீது கட்டுப்பாடு கொண்டுள்ள தொலைத் தொடர்புப் பணிக்கருவி.

dongle : வன்பூட்டு.

door : கதவம் : ஒரு BBS கணினியில் சேமித்து வைக்கப்பட்டுள்ள ஒரு பயன்பாட்டினை இயக்குவதற்கு ஒரு தொடுப்புப் பயனாளரை அனுமதிக்கும் ஒரு நுழைவாயில் அல்லது இடைமுகப்பு.

dopant : ஒட்டுப்பொருள்;மாசுப் பொருள் : உள்ளியம் சார்ந்த அல்லது பாஸ்பரஸ் போன்று ஒட்டும்போது பயன்படுத்தும் ஒரு பொருள்.