பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/478

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

dot matrix character

477

double


அவைகளை செவ்வக வடிவில் அச்சிடத் தயார் செய்யும் தொழில் நுட்பம்.

dot matrix character : புள்ளிக்குறி அச்சுவார்ப்புரு எழுத்து : புள்ளிக்குறி அச்சுவார்ப்புரு உருவமைப்பில் நெருக்கமாக அச்சடிக்கப்பட்ட எழுத்துகள். நெருக்கமாக அச்சடிக்கப்பட்டிருப்பதால், இது ஒரு திண்மத் தோற்றத்தைக் கொடுக்கும்.

dot matrix printer : புள்ளி வரிசை அச்சுப்பொறி;புள்ளிக்குறி அச்சு வார்ப்புரு அச்சடிப்பி : நெருக்கமாக அமைக்கப்பட்ட தொடர்புள்ளிகளாக எழுத்துகள் மற்றும் வரைகலைகளை உருவாக்கும் அச்சுப் பொறி, அச்சிடும் தலை காகிதத்திற்கு நேராக வரும் சரியான நேரத்தில் சுத்தியால் அடிக்கும் ஊசி தொழில் நுட்பம். மலர்ச் (டெய்சி) சக்கர அச்சுப்பொறி தரத்தில் நுட்பமாக அழகிய அச்சுகளை சில பொறிகள் உருவாக்கும்.

dot operator : புள்ளிச் செயற்குறி.

dot per inch : ஓர் அங்குலத்தில் புள்ளிகள்.

dot pitch : புள்ளி இடைவெளி : ஒரு முகப்புத்திரையில் தனிப்பட்ட புள்ளிகளுக்கு இடையிலுள்ள இடைவெளி மில்லிமீட்டரில் கூறப்படுகிறது. புள்ளி இடைவெளி குறையக் குறைய, இடம் பெறவேண்டிய புள்ளிகள் அதிகமாகி படம் மேலும் தெளிவாகத் தெரியும்.

dot prompt : புள்ளிக்குறி நினைப்பூட்டல் : இது தரவுத் தள நினை வூட்டுதல். இது ஒரு புள்ளி ('. '). இதற்கு எதிராக தரவுத் தள நிரல்கள் கொடுக்கப் பட வேண்டும். டிபேஸ் தொகுப்பில் இது பயன்படுத்தப் பட்டுள்ளது.

Dots Per Inch (DPI) : அங்குலவாரிப் புள்ளிக்குறி : ஒர் அங்குல நீளத்தில் ஒர் அச்சடிப்பி எத்தனை புள்ளிக் குறிகளை அச்சடிக்கும் என்பதை அளவிடுவ தற்கான நீட்டலளவை. எடுத்துக்காட்டாக 300 DPI என்றால், ஒரு காகிதத்தில் ஒவ்வொரு கிடைமட்ட அல்லது செங்குத்து அங்குலத்திலும் 300 புள்ளிக்குறி களை அச்சடிப்பி அச்சடிக்கும் என்று பொருள். இது எழுத்துகளை உருவாக்கப் புள்ளிக்குறி அச்சுவார்ப்புருக்களைப் பயன்படுத்தும் அச்சடிப்பிகளுக்கு மட்டுமே பொருந்தும். எடுத்துக் காட்டு : புள்ளிக்குறி அச்சுவார்ப்புரு அச்சடிப்பிகள்;லேசர் அச்சடிப்பி;அனல் அச்சடிப்பி.

double : இரட்டையளவு : இரட்டிப்பளவு.