பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/480

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

double linked list

479

do until


(அதாவது அதில் இருத்தி வைக்கப்பட்டுள்ள a-யின் முக வரியை) சுட்டும். **q என்பது a-யின் மதிப்பை நேரடியாகச் கட்டும். இதனை இரட்டைச் கட்டு விலக்கம் என்கிறோம்.

double linked list : இருமுனைத் தொடுப்புப் பட்டியல்.

double precision : இரட்டைத் துல்லியம்;இரட்டைச் சரி நுட்பம் : எண்கள் கூடுதல் துல்லியத்தைப் பெற கணினி சொற்களைப் பயன்படுத்துதல் பற்றியது.

double precision arithmetic : இரட்டைச் சரிநுட்பக் கணக்கீடு;இரட்டைத் துல்லியக் கணக்கீடு.

double punch : இரட்டை துளை : ஒரு அட்டையின் பத்தி ஒன்றில் செய்யப்படும் ஒன்றுக்கு மேற்பட்ட எண் துளை.

double scan : இரட்டை நுண்ணாய்வு;இரட்டை வருடல் : வண்ண வரைகலைத் தகவமைவு (CGA) மென்பொருள் சுற்றுவழியில் வண்ண வரை கலைத் தகவமைவுத் திண்மத்தை அதிகரிக்கும் அமைவு.

double sided : இருபுற.

double sided disk : இருபுற வட்டு : அதன் இரண்டு மேற்புறங்களிலும் தரவுவை சேமிக்கும் திறனுடைய காந்த வட்டு.

double sided floppy disk : இரட்டைப் பக்க செருகுவட்டு.

double strike : இரட்டை அச்சடிப்பு : ஒவ்வொரு எழுத்தினையும் இருமுறை அச்சடிக்கும் ஒரு அச்சடிப்பு முறை. இரண்டாவது அச்சடிப்பு முதலாவதற்குச் சற்றுக் கீழே இருக்கும்.

double striking : இரட்டை அச்சடிப்பு.

double surface : இரட்டை வட்டுப் பரப்பு.

double width : இரட்டை அகற்சி : ஒவ்வொரு எழுத்தும் இயல்பான எழுத்துகளைப் போல் இருமடங்கு அகலமாக இருக்கக் கூடிய அச்சு அகற்சி. இந்த இரட்டை அகற்சி முதலில் 'விரிவாக்க அகற்சி'என அழைக்கப்பட்டது.

double word : இரட்டைச் சொல் : இரண்டு சொற்கள் நீளமுள்ள சேமிப்பகப் பொருள்.

doubly linked list : இருமுனைத் தொகுப்புப் பட்டியல்;இருவழி இணைப்புப் பட்டி : பட்டியலின் ஒவ்வொரு உறுப்பிலும் முந்தைய மற்றும் அடுத்துவரும் அணுவைப் பற்றிய தரவுவைக் கொண்டுள்ள பட்டியல்.

do until : அதுவரை செய் : அமைக்கப்பட்ட நிரலாக்கத்