பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/484

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

drag

483

DRAW


தரத்தின் அளவு அதிவேக அச்சிடும் முறையை இது குறிப்பிடுகிறது. அதிவேக அச்சிடல் என்பதால் எழுத்துகள் தெளிவாக இல்லாமல் இருக்கும். வேலை செய்யும் பிரதிகள் எடுக்க சரியாக இருக்கும். ஆனால், இறுதி நகலுக்கு ஏற்றதல்ல.

drag : இழு : பொத்தானைக் கீழே வைத்துப் பிடிக்கும்போது 'மெளஸ்' எனும் சுட்டியை (அம்புக்குறி) நகர்த்தும் செயல். கணினி காட்சித் திரையில் பொருள்களை கையாள அல்லது நகர்த்தப் பயன்படுத்தப் படுகிறது.

drag and drop : இழுத்து விடுதல்;இழுத்துப் போடுதல் : வரைகலைப் பணித்தளத்தில் மேற்கொள்ளப்படும் ஒரு செயல்பாடு, திரையில் தோன்றும் ஒரு பொருளை சுட்டியின் மூலம் இழுத்துச் சென்று வேறிடத்தில் இருத்திவைத்தல். (எ-டு) விண்டோஸ் இயக்க முறைமையில் ஒரு கோப்பினை அழிக்கவேண்டுமெனில், கோப்புக்கான சின்னத்தை இழுத்துச் சென்று Recycle Bin எனப்படும் மீட்சிப் பெட்டியில் போட்டு விடலாம். மெக்கின்டோஷில் கோப்புச் சின்னத்தை Trashcan எனப்படும் ஒழிவுப் பெட்டியில் போட்டு விடலாம்.

dragging : இழுத்துவரல் : காட்டப்படும் வரைகலைப் பொருள் சுட்டும், இடஞ்சூட்டும் கருவியை (கர்சரை) பின் பற்றி வருமாறு செய்யும் தொழில் துட்பம். சுட்டுக் கருவி பொத் தானைக் கீழிறக்கிப் பிடித்து சுட்டும் கருவியை நகர்த்தும் போது இவ்வாறு செய்யுமாறு சில கணினிகள் இயங்குகின்றன.

drain : சேரிடம்; வடிகால் : களச் செயல்பாட்டு மின்மப் பெருக்கிகளுடன் இணைக்கும் முகப்புகளில் ஒன்று. மற்ற இரண்டும் மூல மற்றும் வாயில் மின்மப் பெருக்கி. சக்தி எடுத்து வருபவை நேர் மின்னாக இருந்தால், மின்சக்தி மூல இடத் திலிருந்து சேரிடத்திற்குப் போய்ச் சேரும்.

DRAM : டிராம் : Dynamic RAM என்பதன் குறும்பெயர்.

'DRAW : டிரா : எழுதியபின் நேரடி வாசிப்பு என்று பொருள் படும் Direct Read After Write என்ற சொல் தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். ஒர் ஒளிவட்டில் எழுதப்பட்ட தர வின் துல்லியத்தைச் சோதித் தறிய, வட்டில் எழுதப்பட்டவு டனே, சரியாக உள்ளதா என் பதைப் பரிசோதிப்பர். இதற் கான தொழில் நுட்பமே டிரா ஆகும்.