பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/486

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

drive

485

driver


பழைய பாடங்களை வலுப்படுத்தும் மென்பொருள்களைக் கற்பித்தல்.

drive : இயக்கி;முடுக்கி : வட்டு அல்லது டிஸ்கில் தரவுகளை எழுதவும் அல்லது தரவுகளைப் படிக்கவும் தேவையான பருப்பொருள்.

drive bay : இயக்கித் தடம் : ஒரு கணினிப் பேழையில் வட்டு இயக்கிக்காக உள்ள துளை விளிம்பு.

drive change : இயக்ககம் மாற்று.

drive converter : இயக்கக மாற்றி.

drive cartridge : இயக்கக பேழை.

drive, disk : வட்டு இயக்ககம்.

drive door : இயக்கிக் கதவம் : ஒர் வட்டு இயக்கியில் ஒரு வட்டினைப் பூட்டி வைக்கப்பயன் படுத்தப்படும் சேணம், வாயில் அல்லது நெம்புகோல். ஒரு 13. 33 செ. மீ. செருகுவட்டு இயக்கியில் இந்தக் கதவம் ஒரு நெம்புகோல். இது வட்டினைச் செருகிய பிறகு தடத்தின் மீது கீழ்நோக்கி திருப்பப்படுகிறது.

drive identified : இயக்கி அடையாளம் காட்டி.

drive letter : இயக்கக எழுத்து : ஐபிஎம் மற்றும் ஒத்திசைவுக் கணினிகளில் இயக்ககங்களுக்கான பெயரைத் தேர்வு செய்யும் மரபுமுறை. இயக்ககங்களுக்கு A-யில் தொடங்கி பெயர்கள் சூட்டப்படுகின்றன. எழுத் துக்குப்பின் முக்காற்புள்ளி இடப்பட வேண்டும். (எ-டு). A : , C : , D :

drive mapping : இயக்ககப் பெயரீடு : ஒரு கணினியிலுள்ள இயக்ககங் களுக்கு பெயர் சூட்டல். ஒரெழுத்தாகவும் இருக்கலாம். ஒரு பெயராகவும் இருக்கலாம். இயக்க முறைமை அல்லது பிணைய வழங்கன் இந்தப் பெயரைக் கொண்டே அந்த வட்டகத்தை அடையாளம் காணும். எடுத்துக்காட்டாக, பீசிக்களில் எப்போதுமே நெகிழ்வட்டு இயக்ககங்கள் A : , B என்றும், நிலை வட்டகம் C : என்றும் பெயர் பெறுகின்றன.

drive number : இயக்கி எண்;இயக்கக எண் : கணினி அமைப்பில் உள்ள வட்டு இயக்கிகளில் ஒன்றுக்குக் கொடுக்கப்படும் எண் மதிப்பு.

driver : இயக்கி;செலுத்தி : கணினியில் ஒரு சாதனத்தை இயக்கும் அல்லது கட்டுப்படுத்தும் அல்லது முறைப்படுத்தும் இன்னொரு வன்பொருள் சாதனம் அல்லது மென்பொருள் நிரல், எடுத்துக்காட்டாக, ஒரு தட இயக்கி, தொலை