பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/492

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

dual scan display

491

dummy argument


dual scan display : இரட்டை வருடு திரைக்காட்சி : மடிக்கணினிகளில் பயன்படுத்தப்படும் எல்சிடி (LCD-Liquid Crystal Display) காட்சித் திரையின் தொழில்நுட்பம். இயங்காஅணி (Passive Matrix) அடிப்படையிலான நுட்பம் இது. திரையின் புதுப்பித்தல் விகிதம் மற்ற காட்சித் திரைகளைவிட இரு மடங்கு வேகம் ஆகும். இயங்கு அணி (Active Matrix) அடிப்படையிலான தொழில்நுட்பத்தோடு ஒப்பிடுகையில், இரட்டைவருடு திரைக்காட்சி மிகவும் சிக்கனமானது;குறைந்த அளவு மின்சாரத்தையே எடுத்துக் கொள்ளும். ஆனால் அதேவேளையில், தெளிவு குறைவாகவும், குறைந்த பார்வைக் கோணமும் கொண்டதாக இருக்கும்.

dual sided disk drives : இருபுற வட்டு இயக்கிகள் : வட்டின் மேல், கீழ் ஆகிய இருபுறங்களிலும் தரவுகளைச் சேமிக்கவும் திரும்பிப் பெறவும் இரண்டு படி/எழுதுமுனைகளைப் பயன்படுத்தும் வட்டு இயக்கிகள்.

duct : செல்வழி : அகற்றக்கூடிய பொதியுறையினையுடைய கம்பி களுக்கான ஒரு செல்வழி.

dump, automatic hardware : தானியங்கு வன்பொருள் திணிப்பு.

dumb quotes : ஊமை மேற்கோள்;மருங்கல் மேற்கோள் : ஒரு சொல் அல்லது தொடரின் தொடக்கத்தில் இருக்கும் மேற்கோள் குறியும், இறுதியில் இருக்கும் மேற்கோள் குறியும் ஒன்று போலத் தோற்றமளித் தல் (தட்டச்சுப் பொறியில் இருப்பதுபோல). கணினிவிசைப் பலகையிலும் ஒற்றை மேற்கோள் குறியும், இரட்டை மேற்கோள் குறியும் ஒரு பக்கக் குறியாகவே இருக்கும். அவற்றை என்பது போல இருபக்கக் குறிகளாக மாற்றுவதற்கு எம்எஸ்வேர்டு போன்ற மென்பொருள் தொகுப்பு களில் வசதி உண்டு. இருபக்கக்குறிகளை துடிப்பான மேற்கோள் (smart quotes) என்பர்.

dumb terminal : ஊமை முனையம்;ஊமை முகப்பு : குறைந்த உள்ளீடு/ வெளியீடு திறன்களும் செயலாக்கத் திறமைகள் எதுவுமின்றி வரும் ஒளிக்காட்சி முனையம்.

dummy : போலி;வெற்று : குறிப்பிட்ட நிபந்தனைகளை நிறைவேற்று வதற்காகவென்றே நுழைக்கப்படுகின்ற செயற்கை வாக்குவாத நிரல், முகவரி அல்லது தரவுப் பதிவேடு.

dummy argument : போலி வாக்குவாதம்;வெற்று