பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/494

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

dump

493

duplex printing


dump : சேமிப்பு;திணி;கொட்டு : திணிக்கும் செயலாக்கத்தின் விளைவாக ஏற்படும் தரவுகள் ஒரு சேமிப்பகச் சாதனத்திலிருந்து வேறொரு சேமிப்பகச் சாதனத்திற்கோ அல்லது அச்சுப் பொறிக்கோ உள்ளடக்கங்களை மாற்றி நக லெடுப்பதை இது குறிப்பிடுகிறது.

dumping : திணித்தல்;கொட்டுதல் : சேமிப்பகத்தில் உள்ளவை முழுவதும் அல்லது பகுதியை நகலெடுத்தல். கணினியின் உள்சேமிப்பகத்திலிருந்து துணை சேமிப்பகத்திற்கோ அல்லது வரி அச்சுப்பொறிக்கோ மாற்றுவதை இவ்வாறு குறிக்கலாம்.

duodecimal : இரட்டை பதிமம் : நிலைகள் அல்லது இலக்கங்களுக்கு உள்ள 12 மாறுபட்ட மதிப்பளவுகள் உள்ளன. இவற்றிலிருந்து தேவை யானதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

duplex : இருதிசை இயங்கு வழித்தடம்;இருவழித்தடம் : ஒரே நேரத்தில் இரண்டு திசைகளிலும் தரவுத்தொடர்பு அனுப்புவதை அனுமதிக்கும் தரவுத் தொடர்பு வழித்தடம்.

duplex channel : இருதிசைத் தடம் : இருதிசையிலும் தரவை அனுப்பப்/பெற வசதியுள்ள தரவுத் தொடர்பு இணைப்பு.

duplexing : மாற்றமைத்தல்;இரட்டை வழியாக்கம் : ஒரு கருவி செயலிழந்தால் மாற்றுக் கருவியைக் கொண்டு கணினி தொடர்ந்து இயங்கச் செய்ய மின் சுற்று அல்லது கணினியின் வெளிப்புறக் கருவிகளுக்கு மாற்றுக் கருவியைப் பயன்படுத்துதல்.

duplex operation : இருமடிச் செயற்பாடு : தரவுகள் இருதிசைகளிலும் செல்வதற்கு அனுமதிக்கும் ஒர் அனுப்பீட்டு முறை. இது, அச்சடித்த எழுத்தினைக் கணினிக்கு அனுப்புகிற அதே சமயத்தில் திரையிலும் காட்சி யாகக் காட்டுகிறது. பாதி இருமடி என்பது இரு திசைகளிலும் செல்ல அனுமதிக்கிறது;ஆனால் ஒரே சமயத்தில் அன்று.

duplex printer : இருதிசை அச்சுப்பொறி : பொதுவாக, அச்சுப்பொறிகளில் அச்சு முனை (print head) ஒரு திசையில் மட்டுமே அச்சிடும். இடப்புற மிருந்து வலப்புறம் அச்சிட்டுச் செல்லும். பிறகு அச்சுமுனை அச்சிடாமல் இடப்பக்கம் திரும்பி வரும். பிறகு முன் போல வலப்பக்கம் வரை அச் சிட்டுச் செல்லும். சில அச்சுப்பொறிகளில் இரு திசைகளிலும் அச்சிடும்படி அமைத்திருப்பர்.

duplex printing : இருமடி அச்சடிப்பு : ஒரு தாளின் இரு