பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/495

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

duplexed system

494

DVD


பக்கங்களிலும் ஒர் ஆவணத்தை அச்சடித்தல். இதனால், ஆவணம் கட்டுமானம் செய்யப்பட்ட பிறகு, இட, வலப்பக்கங்கள் ஒன்றையொன்று எதிர்நோக்கியவாறு இருக்கும்.

duplexed system : இருவழியாக்க பொறியமைவு;இருமடியாக்கிய பொறியமைவு : செயற்பணியில் ஒரு படித்தாக இருக்கும் இரு பொறியமைவுகள். அவை இரண்டும், ஒரே செயற்பணியைச் செய்யலாம்; அல்லது மற்றொன்று செயலிழக்கும் போது ஒன்று செயற்பட ஆயத்த மாக இருக்கும்.

duplicate : நகலெடு : மூல வடிவம் போலவே பரு வடிவத்தில் முடிவுகள் ஒன்றாக இருக்கும் வண்ணம் நகல் எடுத்தல். மூல டிஸ்கெட்டில் உள்ள அதே வடிவமைப்பில், அதே தரவுவைக் கொண்டதாக புதிய வட்டினை உருவாக்குதல்.

duplicate keys : இருமடி விடைக்குறிப்புகள் : ஒரு கோப்பிலுள்ள ஒரு படித்தான விடைக் குறிப்புகள். கணக்கு எண் போன்ற அடிப்படை விடைக் குறிப்புகளை இருமடியாக்கம் செய்யமுடியாது. ஏனென்றால், இரு வாடிக் கையாளர்களுக்கு அல்லது பணியாளர்களுக்கு ஒரே எண்ணைக் குறித்தளிக்க முடியாது. தேதி, பொருள், நகர் போன்ற துணை விடைக்குறிப்புகளை கோப்பில் அல்லது தரவுத் தளத்தில் இருபடியாக்கம் செய்யலாம்.

duplication check : இரட்டிப்பாதல் சோதனை;மறு சரிபார்ப்பு : ஒரே இயக்கத்தை இரண்டுமுறை தனித்தனியாகச் செய்தபோதிலும் அதன் விளைவுகள் ஒரே மாதிரியாக இருக்கும் என்பதற்கான சோதனை. வேறொரு கருவியில் ஒரே நேரத்தில் இதைச் செய்யலாம் அல்லது அதே கருவியில் வெவ்வேறு தடவைகளில் செய்யலாம்.

duration : கால நீட்சி : ஒரு பணியைச் செய்து முடிப்பதற்கு எடுத்துக் கொள்ளப்படும் செயற்பணி நேர அளவு.

dust cover : தூசு உறை;தூசு காப்புறை : நுண்கணினிகள், வட்டு இயக்கிகள், முகப்பு அச்சுப்பொறிகள் போன்றவற்றின் மோசமான எதிரிகளிட மிருந்து அவற்றைக் காப்பாற்றப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தூசு உறைகள்.

DVD : டிவிடி : Digital Versatile DisC/Digital Video DisC என்பவற்றின்

தலைப்பெழுத்துக் குறும் பெயர்.