பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/496

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

DVI OR DV-I

495

dye polymer recording


DVI or DV-I : டிவிஐ/டிவி-ஐ : இலக்க முறை ஒளிக்காட்சி இடைமுகம் என்று பொருள்படும் (Digital Video interface) என்ற சொல்தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். ஒரு கணினியின் நிலைவட்டில் அல்லது குறுவட்டில் ஒளிக் காட்சி, கேட்பொலி, வரைகலை மற்றும் பிற தரவுகளைப் பதிவு செய்வதற்குரிய வன்பொருள் அடிப்படையிலான இறுக்கும்/விரிக்கும் தொழில் நுட்பம். 1987ஆம் ஆண்டு ஆர்சிஏ நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு 1988இல் இன்டெல் நிறுவனத்தால் வாங்கப்பட்டது. அதன்பிறகு இன்டெல் டிவிஐ-யின் மென்பொருள் பதிப்பை இன்டியோ (Indeo) என்ற பெயரில் வெளியிட்டுள்ளது.

Dvorak keyboard : டிவிஓஆர்ஏகே விசைப்பலகை : ஆகஸ்ட் என்பவரால் உருவாக்கப்பட்ட விசைப்பலகை. அதிகமாகப் பயன்படுத்தப்படும் எழுத்து களை விசைப்பலகையில் நடுவில் வைத்து வலுவான விரல்களால் அடிக்கச் செய்வதன் மூலம் பிழைகளைக் குறைத்து வேகத்தையும் வசதியையும் டிவிஒஆர்ஏகே விசைப்பலகை அளிக்கிறது. வழக்கமான கியூடபிள்யூஇ ஆர்டிஒய் (QWERTY) யைவிட இதில் விரல் அசைவுகள் 90 விழுக்காடு குறைகின்றன. 1936இல் இந்தமுறை பேடன்ட் செய்யப்பட்டாலும் 1982இல் அன்சியால் ஏற்கப்பட்ட பிறகே இது புகழ் பெற்றது. இந்த விசைப் பலகைதான் உயிர் எழுத்துகளான AEI0U-க்களை ஒன்றாக அமைத்துள்ளது. மைய வரிசையில் இடதுகையில் உயிர் எழுத்துகளும், வலதுகையில் DHTNS என்னும் அதிகமாக பயன்படுத்தப்படும் எழுத்துகளும் அமைந்துள்ளன.

dyadicஇருவினை;இரட்டை : இரண்டு இயக்கிகளைப் பயன்படுத்தும் இயக்கமுறை பற்றியது.

dyadic operation : இருவினை;இரட்டை இயக்கம் : இரண்டு இயக்கப் பொருளைக் கொண்ட இயக்கம்.

dyadic two : இரட்டை இணை : இரு அமைப்பிகளைப் பயன்படுத்து வதைக் குறிக்கும் தொடர்.

dye polymer recording : சாய மீச்சேர்மப் பதிவு : சாயமிட்ட பிளாஸ்டிக் படுகைகளைப் பதிவு ஊடகமாகப் பயன்படுத்தும் ஒளியியல் பதிவு உத்தி. சில ஒருமுறை எழுதி பன்முறை படிக்கப்படும் WORM சாதனங்களில் ஒற்றைச் சாய மீச்சேர்மப் படுகை பயன்படுத்தப்படுகிறது.